Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்தியாவுக்கு எதிராக பெரிய வெற்றி.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த NZ கேப்டன் சான்ட்னர்

ஆக்லாந்து: 4-வது டி20 போட்டியில் இந்திய அணியை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றது. தொடரை ஏற்கனவே இழந்த நியூசிலாந்து, சொந்த மண்ணில் வைட்வாஷ் தோல்வி அடைவதைத் தவிர்த்து ஆறுதல் வெற்றி பெற்றது. அதிலும் பெரிய வெற்றியாக பெற்றதால் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் மகிழ்ச்சியுடன் பேசினார்.

ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணியில், கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் 107 ரன்கள் குவித்து அசத்தினார். மைக்கேல் பிரேஸ்வெல்லின் 25 பந்துகளில் 65 ரன்கள் குவித்து மிரட்டினார். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது. சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பின்னர் 260 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஜேக்கப் டஃபியின் அபார பந்துவீச்சில் சீட்டுக்கட்டு போல சரிந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.

IND vs NZ Mitchell Santner Commends All-Round Performance Following New Zealand s Win Over India in 4th T20I

இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், "கடைசியாக ஒரு வெற்றியைப் பதிவு செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மைதானத்தில் பனிப்பொழிவு பெரிய அளவில் இல்லை. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டோம். கிளென் பிலிப்ஸ் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் பேட்டிங் செய்த விதம் எங்களை ஒரு வலுவான நிலைக்குக் கொண்டு சென்றது. 250 முதல் 260 ரன்கள் வரை குவித்தது மிகச் சிறப்பானது" என்றார்.

2 மெகா உலக சாதனைகளை படைத்த அர்ஷ்தீப் சிங்.. இந்தியாவில் எந்த பவுலரும் தொடாத டி20 ரெக்கார்டுகள்

2 மெகா உலக சாதனைகளை படைத்த அர்ஷ்தீப் சிங்.. இந்தியாவில் எந்த பவுலரும் தொடாத டி20 ரெக்கார்டுகள்

தொடர்ந்து பந்துவீச்சு வியூகம் குறித்துப் பேசிய அவர், "எங்களின் பந்துவீச்சு கடந்த போட்டிகளை விட மிகவும் மேம்பட்டிருந்தது. ஆடுகளத்தில் பந்தை நல்ல லென்த்தில் வீசி, மைதானத்தின் எல்லைகளுக்கு ஏற்ப பந்துவீசினோம். பீல்டிங்கில் ஓரிரு கேட்ச்களை தவறவிட்டாலும் கூட, பவுலர்கள் சரியான இடங்களில் பந்துகளை வீசி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இது அணிக்கு நல்ல பலனைத் தந்தது" என்று தெரிவித்தார்.

Story first published: Friday, October 30, 2026, 17:15 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+