Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 மெகா உலக சாதனைகளை படைத்த அர்ஷ்தீப் சிங்.. இந்தியாவில் எந்த பவுலரும் தொடாத டி20 ரெக்கார்டுகள்

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்து 2 வரலாற்று சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். சர்வதேச டி20 அரங்கில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். நியூசிலாந்து இன்னிங்ஸின் கடைசி ஓவரில் கேப்டன் மிட்செல் சாண்ட்னரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இந்த இரட்டை சாதனைகளை அவர் நிகழ்த்தினார்.

அர்ஷ்தீப் சிங் தனது அறிமுகப் போட்டியில் இருந்து வெறும் 1,577 நாட்களில் 150 டி20 விக்கெட்டுகளை எட்டி, உலக அளவில் அதிவேகமாக இந்த மைல்கல்லைத் தொட்ட பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு இலங்கையின் வனிந்து ஹசரங்கா 2,325 நாட்களில் இந்த சாதனையை எட்டியதே சாதனையாக இருந்தது. அதை அர்ஷ்தீப் சிங் தற்போது தகர்த்துள்ளார்.

Arshdeep Singh Creates History in IND vs NZ 4th T20 Fastest to 150 T20I Wickets and 40 Wickets in a Calendar Year

குறைந்த பந்துகளில் 150 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 2143 பந்துகளில் 150 விக்கெட்களை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் அர்ஷ்தீப் சிங். முதல் இரண்டு இடங்களில் வனிந்து ஹசரங்கா (2035 பந்துகள்), ரஷித் கான் (2098 பந்துகள்) உள்ளனர். அதே சமயம், வேகப் பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் விரைவாக 150 டி20 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், ஒரு காலண்டர் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் 40 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐசிசி முழு உறுப்பினர் நாட்டின் முதல் பந்துவீச்சாளர் என்ற வரலாற்று பெருமையையும் அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார். 2026-ம் ஆண்டில் இதுவரை 40 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன்பு 2022-ல் அயர்லாந்தின் ஜோஷ் லிட்டில் 39 விக்கெட்டுகளும், 2024-ல் இலங்கையின் ஹசரங்கா 38 விக்கெட்டுகளும், 2022-ல் புவனேஷ்வர் குமார் 37 விக்கெட்டுகளும் எடுத்ததே சாதனையாக இருந்தது.

IND vs PAK: 3.5 ஓவரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான்.. பாண்டியா கேப்டன்சியில் மெகா சொதப்பல்

IND vs PAK: 3.5 ஓவரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான்.. பாண்டியா கேப்டன்சியில் மெகா சொதப்பல்

இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்தது. கிளென் பிலிப்ஸ் 49 பந்துகளில் சதம் விளாசி 107 ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 25 பந்துகளில் 65 ரன்களும் குவித்தனர். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக ஓர் அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது. முன்னதாக இங்கிலாந்து அணி அடித்திருந்த 257 ரன்கள் சாதனையை நியூசிலாந்து முறியடித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

பாகிஸ்தான் நம்பர் 1.. இந்தியா அடுத்த சுற்று செல்ல என்ன செய்யணும்? ஹாங்காங் சிக்ஸஸ் புள்ளிப்பட்டியல்

Also Read

பாகிஸ்தான் நம்பர் 1.. இந்தியா அடுத்த சுற்று செல்ல என்ன செய்யணும்? ஹாங்காங் சிக்ஸஸ் புள்ளிப்பட்டியல்
Story first published: Friday, October 30, 2026, 17:03 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+