Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முழு ஃபிட்னஸ் உடன் இருக்காரு.. ரஞ்சி டிராபியில் களமிறங்கும் முகமது ஷமி.. ஆஸ்திரேலியா பறப்பது உறுதி?

பெங்களூர்: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி ரஞ்சி டிராபி தொடரின் 2 போட்டிகளில் விளையாட உள்ளது தெரிய வந்துள்ளது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த முகமது ஷமி, பெங்கால் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி தனது ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மை நிரூபிக்க உள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தடுமாறி வரும் சூழலில், ஆஸ்திரேலியா அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் ஏராளமான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ind vs nz jasprit bumrah mohammed shami

அதற்கேற்ப இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது. அதில் சிறப்பாக செயல்படக் கூடிய வீரர்கள் இந்திய அணியின் நெட் பவுலர்களாக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.

ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்கு பின் சுமார் ஓராண்டுக்கும் மேலாக முகமது ஷமி காயத்தில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பெங்களூரில் உள்ள என்சிஏ மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள முகமது ஷமி, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருவதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்ப பெங்களூர் டெஸ்ட் போட்டியின் போது துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருக்கு பவுலிங் செய்தார்.

அப்போதே முகமது ஷமி கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரஞ்சி டிராபி தொடரின் ரவுண்ட் 3 மற்றும் ரவுண்ட் 4ல் பெங்கால் அணிக்காக முகமது ஷமி களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நடக்கவுள்ள கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி களமிறங்கவுள்ளார்.

இதனை பெங்கால் அணியின் பயிற்சியாளர் லட்சுமி ரத்தன் சுக்லா உறுதி செய்துள்ளார். ரஞ்சி டிராபியில் 2 போட்டிகளில் விளையாடி ஃபிட்னஸை நிரூபிக்கும் பட்சத்தில், முகமது ஷமியால் நிச்சயம் இந்திய அணிக்கு திரும்ப முடியும். அதேபோல் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு நவம்பர் 10ஆம் தேதிக்கு பின்னரே நடக்கவுள்ளது.

இதனால் இந்திய அணியில் முகமது ஷமி நிச்சயம் இருப்பார் என்றும் பார்க்கப்படுகிறது. கடந்த சில தொடர்களில் இந்திய அணியின் முகமது சிராஜ் செயல்பாடுகள் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றது. இதனால் முகமது ஷமி இந்திய அணியில் இணையும் பட்சத்தில், ஆஸ்திரேலியா மண்ணில் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணியால் சிறப்பாக செயல்பட முடியும் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, October 25, 2024, 19:39 [IST]
Other articles published on Oct 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+