பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் நடப்பாண்டில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் தோற்று இருக்கிறது. இந்த சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24ஆம் தேதி பூனேவில் நடைபெறுகிறது இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணியில் வெற்றி சதவீதம் குறைந்து இருப்பதால் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியதொடரில் ஒரு டெஸ்ட் போட்டிகளாக வெல்ல வேண்டிய சூழலில் இந்தியா தள்ளப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில் சொந்த மண்ணில் எப்போதுமே ஒவ்வொரு அணிகளும் பலமாக இருக்கும். அந்த வகையில் இந்திய அணி 2012 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் இழந்ததே கிடையாது. இந்த சூழலில் சொந்த மண்ணில் அதிக போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய டெஸ்ட் அணி கேப்டன் யார் என்பதை தற்போது பார்க்கலாம். பட்டோடி கேப்டனாக இருந்தபோது இந்திய அணி சொந்த மண்ணில் ஒன்பது போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
அதற்கு அடுத்தபடியாக அசாருதீன் இருக்கிறார். இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் தோற்று இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கபில்தேவ் இருக்கிறார். கபில்தேவ் கேப்டனாக இருந்தபோது இந்திய அணி நான்கு டெஸ்ட்களில் சொந்த மண்ணில் தோற்று இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தற்போது ரோகித் சர்மா இருக்கிறார்.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோற்று இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பிசன் சிங் பேடி இருக்கிறார். அவரது தலைமையிலும் இந்திய அணி மூன்று போட்டிகளில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தோனி, கங்குலி, டெண்டுல்கர் ஆகியோர் கேப்டனாக இருந்தபோதும் இந்திய அணி தலா மூன்று போட்டிகளில் சொந்த மண்ணில் தோல்வியை தழுவி இருக்கிறது.
விராட் கோலி தலைமையில் இந்திய அணி 31 டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் விளையாடி அதில் வெறும் இரண்டு போட்டியில் மட்டும் தான் தோல்வியை தழுவி இருக்கிறது. ரோகித் சர்மா இன்னும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் தோற்றாலும் கூட அசாருதீன், கபில் டேவில் சோகமான பட்டுகளில் இணைந்து விடுவார்.