IND vs NZ - டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள், விக்கெட் எடுத்த வீரர்கள்.. என்னப்பா இந்திய வீரர்களே இல்ல
மும்பை : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கிய போது இந்திய ரசிகர்கள் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி தொடரை முழுமையாக கைப்பற்றும் என்று நம்பிக்கையில் இருந்தார்கள்.
இதற்கு காரணம் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு நியூசிலாந்து அணி இலங்கையிடம் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அடி வாங்கி வந்தது. இதனால் இந்திய அணி இந்த தொடரை முழுமையாக கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் நியூசிலாந்து அணி அபாரமாக விளையாடி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இந்த சூழலில் மூன்றாவது டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணியை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் சுழற் பந்துவீச்சை சரியாக விளையாடுவதில்லை.
எந்த வீரர்களும் பார்மில் இல்லாததால் மிகப்பெரிய ஒரு மோசமான தோல்வியை நோக்கி இந்தியா எதிர்கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் நடப்பு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். நியூசிலாந்து வீரர் கான்வே இரண்டு டெஸ்டில் நான்கு இன்னிங்ஸ் விளையாடி அதிகபட்சமாக 247 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடங்கும்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் கான்வே இருக்கிறார்.இவர் இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்ஸில் 201 ரன்கள் அடித்துள்ளார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். மூன்றாவது இடத்தில் இந்திய வீரர் சர்பராஸ் கான் இருக்கிறார். இவர் இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 170 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் அடங்கும். நான்காம் இடத்தில் ஜெய்ஸ்வால் இருக்கிறார்.
இவர் இரண்டு போட்டிகளில் 4 இன்னிங்ஸ் விளையாடி 155 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட், இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ் விளையாடி 137 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் ஒரு அரை சதம் அடங்கும். இந்தப் பட்டியலில் விராட் கோலி எட்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ் விளையாடி 88 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
ஒன்பதாவது இடத்தில் ஜடேஜா 85 ரன்களுடனும் 12-வது இடத்தில் ரோகித் சர்மா 62 ரன்களுடனும் இருக்கின்றார். பவுலர்களுக்கான பட்டியலில் நியூசிலாந்து வீரர் ஷாண்ட்நர் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் ஒரு டெஸ்டில் 11 விக்கெட் வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், மாட் ஹென்றி ஒரு டெஸ்டில் எட்டு விக்கெட் எடுத்து மூன்றாவது இடத்திலும் உருவாக்கி இரண்டு டெஸ்டில் ஏழு விக்கெட் எடுத்து நான்காவது இடத்திலும் ஜடேஜா மற்றும் அஸ்வின் இரண்டு டெஸ்டில் தலா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்த ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றார்கள்.


Click it and Unblock the Notifications