Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட்டாக்கிங் மோடில் நட்சத்திர பவுலர்.. இந்திய கேப்டனுக்கு வந்த ஆபத்து.. சமாளிப்பாரா ஹிட்மேன்?

தரம்சாலா: நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இரு அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. இதனால் முதல் தோல்வியை எந்த அணி பெறும், அரையிறுதி சுற்றுக்கு எந்த அணி வேகமாக நெருங்கும் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

IND vs NZ: New Zealand bowler Trent Boult is the biggest problem for Rohit sharma in Dharamsala stadium

இந்த உலகக்கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அபாரமான ஃபார்மில் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட்டானாலும், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 86 ரன்கள், வங்கதேச அணிக்கு எதிராக 49 ரன்கள் என்று மொத்தமாக 259 ரன்களை குவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பவர் பிளே ஓவர்களில் ரோகித் சர்மாவின் விஸ்வரூபம் எதிரணிகளை மொத்தமாக பின்வாங்க வைக்கும் வகையில் உள்ளது. அதேபோல் நடப்பாண்டில் 18 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, பவர் பிளே ஓவர்களில் மட்டும் 32 சிக்சர்களை விளாசியுள்ளார். இதனால் வலிமையான நியூசிலாந்து அணியின் பந்துவீச்சிற்கு எதிராக இந்திய அணியின் ரோகித் சர்மாவின் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரோகித் சர்மா எப்போதும் திணறி வருகிறார். மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக கூட திணறியது வெளிப்படையாக தெரிந்தது. இந்த நிலையில் சிறந்த ஸ்விங் பவுலரான போல்ட்-க்கு எதிராக ரோகித் சர்மா எப்படி விளையாடுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதுவரை ரோகித் சர்மாவுக்கு எதிராக 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 முறை வீழ்த்தி இருக்கிறார் போல்ட்.

அதேபோல் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் டிம் சவுதி களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவரும் ரோகித் சர்மாவுக்கு அதிக தொல்லையை கொடுத்துள்ளார். 15 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 5 முறை ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். இவர்களின் அட்டாக்கை கணித்து 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை ரோகித் சர்மா கீழ் வரிசையில் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 22, 2023, 11:22 [IST]
Other articles published on Oct 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+