Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ-நியூசிலாந்து அணியிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல்! இனி வெறும் 3 வேகப்பந்துவீச்சாளர் தான்

பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை இன்று பெங்களூருவில் காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.எனினும் பெங்களூரில் கடும் மழை பெய்து வருவதால், போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என தெரியவில்லை.

நியூசிலாந்து அணியில் முதல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து வில்லியம்சன் ஏற்கனவே காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் காயம் அடைந்திருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

ind vs nz sarfaraz khan shubman gill rohit sharma


நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரில் ஒருவராக பெண் சியர்ஸ் முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் பெங்களூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு காயத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இருந்தும் அவர் நீக்கப்பட்டு இருக்கிறார்.

இதனால் தற்போது இந்திய தொடரில் உள்ள நியூசிலாந்து அணியில் வெறும் மூன்று வேக பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். டிம் சவுதி, வில் ஓ ருர்க்கி, மாட் ஹேன்றி ஆகியோர் மட்டுமே உள்ளனர்.சுழற் பந்துவீச்சாளராக ஏஜாஸ் பட்டேல் மற்றும் சார்ட்னர் உள்ளனர். இவர்களை தவிர ரச்சின் ரவீந்திரா சில ஓவர்கள் விசுவார். அதுமட்டுமில்லாமல் டேரல் மிட்செல் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சை வீச கூடும்.

நியூசிலாந்து வீரர் பென் சீயர்ஸ் விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள பயிற்சியாளர் கேரி, பென் விலகி இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. பென் நல்ல வேகத்தில் பந்து வீசுவார். அவர் கடந்த சீசனில் நியூசிலாந்தில் நடைபெற்ற போட்டிகளில் அபாரமாக செயல்பட்டார்.அவரை நாங்கள் மிகவும் நம்பி இருந்தோம். தற்போது அவர் எவ்வளவு நாட்கள் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை.

பென் விரைவில் குணமடைந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப வேண்டும் என நினைக்கிறேன். எனினும் பென்ணுக்கு பதிலாக ஜேக்கப் தூபி அறிவிக்கப்பட்டிருக்கிறார். எனினும் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தான் வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேக்கப் கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாடி இருக்கிறார். நியூசிலாந்துக்காக ஆறு சர்வதேச ஒரு நாள் மற்றும் 14 t20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.எனவே அவர் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செயல்படுவார் என்று தாம் நம்புவதாக பயிற்சியால் கேரி கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 16, 2024, 0:17 [IST]
Other articles published on Oct 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+