Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துபாய் அல்ல.. எங்கு போட்டி நடத்தி இருந்தாலும் இந்தியா தான் வென்று இருக்கும்.. வசிம் அக்ரம் பாராட்டு

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வென்று இருப்பதை நமது நாட்டு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.

ஆனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி கோப்பையை வென்று விட்டதாக பல வெளிநாட்டு வீரர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இது இந்தியாவுக்கு சாதகமாக மாறியதாகவும், மற்ற அணிகள் எல்லாம் வெவ்வேறு ஆடுகளங்களில் விளையாடியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.

Champions trophy 2025 Ind vs NZ virat kohli rohit sharma

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வசிம் அக்ரம் ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர் சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பல தரப்பட்ட மக்களும் இந்தியா ஒரே மைதானத்தில் விளையாடுகிறது, இது இந்தியாவுக்கு சாதகத்தை கொடுக்கிறது என பேசுகிறார்கள்.

நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியா துபாயில் அல்ல, வேறு எந்த மைதானத்தில் போட்டியை வைத்திருந்தாலும் இதே மாதிரி தான் வெற்றி பெற்றிருக்கும். பாகிஸ்தானில் விளையாடி இருந்தாலும் இந்தியா தான் கோப்பையை கைப்பற்றி இருக்கும். 2024 டி20 உலக கோப்பையை இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் இதே மாதிரி தான் வெற்றி பெற்றது.

தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்தியா அதே போல் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியில் எவ்வளவு திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்திய கேப்டனின் தலைமை பண்பு எப்படி இருக்கிறது என்பதை இந்த வெற்றி காட்டுகிறது.
நியூசிலாந்துக்கு எதிராக மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியது.

இதனை நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அதன் பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது. இதன் மூலம் பயிற்சியாளர் கம்பீரையும் கேப்டன் ரோகித் சர்மாவையும் பதவி விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி குரல்களை எழுப்பினர்.

ஆனால் பிசிசிஐ பிடிவாதமாக இவர்கள் தான் எங்களின் பயிற்சியாளர்.இவர் தான் எங்களுடைய கேப்டன். இவர்களை மாற்ற முடியாது என கூறி அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கியது. அவசரம் காட்டாமல் பொறுமையை கடைபிடித்தது. அந்த பொறுமைக்கு கிடைத்த வெற்றி தான் இது என்று வசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

Story first published: Monday, March 10, 2025, 8:30 [IST]
Other articles published on Mar 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+