For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முடிஞ்சா என்னை டீமை விட்டு தூக்குங்க.. அதிரடி ஆட்டம்.. சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்த இளம் வீரர்!

கிறைஸ்ட்சர்ச் : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர் ப்ரித்வி ஷா அதிரடி அரைசதம் அடித்தார்.

Recommended Video

Prithvi Shaw enter record books in NZ test | சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்த ப்ரித்வி ஷா!

அதன் மூலம், சாதனைப் பட்டியல் ஒன்றில் சச்சினுக்கு அடுத்த இடத்தையும் பிடித்துள்ளார்.

முதல் போட்டியில் சரியாக ஆடாததால் அணியை விட்டு நீக்க வேண்டும் என விமர்சனம் எழுந்த நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ப்ரித்வி ஷா.

ப்ரித்வி ஷா நிலை

ப்ரித்வி ஷா நிலை

ப்ரித்வி ஷா 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆடிய அவர், அதன் பின் காயம் மற்றும் தடை காரணமாக இந்திய அணியில் இடம் பெற முடியாமல் தவித்தார்.

முதல் போட்டி சொதப்பல்

முதல் போட்டி சொதப்பல்

நீண்ட இடைவெளிக்குப் பின் 2020இல் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெற்றார். இந்த தொடரின் முதல் போட்டியில் அவர் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் 16 மற்றும் 14 ரன்களே எடுத்தார். அவர் ஆட்டமிழந்த விதம் மோசமாக இருந்தது.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

ரசிகர்களும், விமர்சகர்களும் ப்ரித்வி ஷா மீது கடும் விமர்சனத்தை முன் வைத்தனர். அடிப்படை பேட்டிங் டெக்னிக்கில் ப்ரித்வி ஷா தவறாக ஆடியதை பயன்படுத்தி நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தியதாக விமர்சனம் எழுந்தது.

போட்டியில் நீக்கம்?

போட்டியில் நீக்கம்?

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரை நீக்கி விட்டு ஷுப்மன் கில்லை அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. எனினும், அவர் மீது நம்பிக்கை வைத்த கேப்டன் கோலி அவரை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறச் செய்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர் மயங்க் அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ப்ரித்வி ஷா மறுபுறம் சிறப்பாக ஆடினார். அதிரடியாக பட்டையைக் கிளப்பிய அவர் எட்டு போர், ஒரு சிக்ஸ் அடித்து தெறிக்க விட்டார்.

அதிரடி அரைசதம்

அதிரடி அரைசதம்

சரியாக சிக்ஸ் அடித்து வெளிநாட்டு மண்ணில் தன் முதல் அரைசதம் கடந்தார். 64 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த அவர் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் அரிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தினார்.

சச்சின் சாதனை

சச்சின் சாதனை

நியூசிலாந்து மண்ணில் இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை செய்து முதல் இடத்தில் இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். அவர் 16 வயது, 291 நாட்களில் அந்த சாதனையை செய்து இருந்தார்.

ப்ரித்வி ஷா 2ஆம் இடம்

ப்ரித்வி ஷா 2ஆம் இடம்

ப்ரித்வி ஷா 20 வயது, 112 நாட்களில் நியூசிலாந்து மண்ணில் அரைசதம் அடித்து இளம் வயதில் அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தில் அதுல் வாசன் இருக்கிறார்.

விமர்சனத்துக்கு பதிலடி

விமர்சனத்துக்கு பதிலடி

தன் அதிரடி அரைசதம் மூலம் ப்ரித்வி ஷா தன்னை கடுமையாக விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரது பேட்டிங் உத்தி இரண்டாவது போட்டியில் மேம்பட்டு இருந்ததாக முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Story first published: Saturday, February 29, 2020, 14:40 [IST]
Other articles published on Feb 29, 2020
English summary
IND vs NZ : Prithvi Shaw hit fift and enter record books in NZ test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+