IND vs NZ: சஞ்சு சாம்சனை விமர்சித்த நெட்டிசன்.. பங்கமாக கலாய்த்த அஸ்வின்
மும்பை: நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனின் சுமாரான ஆட்டத்தை குறிப்பிட்டு விமர்சித்த நெட்டிசனுக்கு முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அளித்த சுவாரஸ்யமான பதில் சமூக வலைதளங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மொத்தம் 107 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் போட்டியில் 67 ரன்கள் விளாசிய அவர், அதன்பின்னர் நடைபெற்ற போட்டிகளில் 14, 18, 4 மற்றும் 4 என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி டி20 போட்டியில் அவர் 4 ரன்களில் வெளியேறியதைத் தொடர்ந்து, நெட்டிசன் ஒருவர் அஸ்வினை எக்ஸ் தளத்தில் ட்ரோல் செய்தார்.

அந்த நெட்டிசன் தனது பதிவில், "ஹலோ அஸ்வின், உங்களின் முதல் தேர்வான சஞ்சு சாம்சன் இந்தத் தொடர் முழுவதும் சொதப்பிவிட்டார்" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த அஸ்வின், "சஞ்சு எனது முதல் தேர்வுதான், ஆனால் அவர் உங்களுக்கு ஒரு முழு நேர Obsession ஆக மாறிவிட்டார்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டுப் பதிலடி கொடுத்தார்.
இந்த டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்குத் தொடர்ச்சியாக தொடக்க வீரராக வாய்ப்பளிக்கப்பட்டது. இதன் காரணமாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அணி நிர்வாகத்தின் ஆதரவு இருந்தபோதிலும், இந்தத் தொடரில் சஞ்சு சாம்சனால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது.
இந்திய அணியின் அடுத்த டி20 தொடர் வரும் டிசம்பர் 22 அன்று இலங்கைக்கு எதிராகத் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பாக, டிசம்பர் 14 அன்று தொடங்கும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கேரளா அணிக்காக அஸ்ஸாமுக்கு எதிராக சஞ்சு சாம்சன் களம் இறங்கி தனது ஃபார்மை மீட்டெடுப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


