IND vs NZ: புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு தந்தது மகிழ்ச்சி!முகமது ஷமிக்கு ஏன் தரவில்லை-ரவி சாஸ்திரி
மும்பை: புவனேஷ்வர் குமார் இந்திய டி20 அணிக்குத் திரும்பியிருப்பதை முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,வரவேற்றுள்ளார். நியூசிலாந்து ஆடுகள சூழலுக்கு அவர் மிகவும் ஏற்றவராக இருப்பார் என்று சாஸ்திரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் மீண்டும் இடம் பெறப் போதுமான அளவு சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அர்ஷ்தீப் சிங்குடன் இணைந்து புவனேஷ்வர் குமார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை வழிநடத்தவுள்ளார். 36 வயதான புவனேஸ்வர் குமார், ஐபிஎல் தொடரில் 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார்.

அனுபவத்திற்கு மாற்று எதுவும் இல்லை என்று கூறிய ரவி சாஸ்திரி, புவனேஷ்வர் குமார் போன்ற தரமும் அனுபவமும் கொண்ட பந்துவீச்சாளர் அணியில் இருப்பது முக்கியமானது என்றும், ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய சிறப்பான ஆட்டமும் இந்திய அணிக்கான பல வருட அனுபவமும் நியூசிலாந்து சூழலில் அவருக்குப் பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புவனேஷ்வர் குமார் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், மற்றொரு மூத்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியும் அணிக்குத் திரும்ப தகுதியானவர் என்று ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். சிவப்பு மற்றும் வெள்ளை பந்து கிரிக்கெட் இரண்டிலும் முகமது ஷமி மீண்டும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்குப் போதுமான பங்களிப்பை அளித்துள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு முகமது ஷமி இந்திய அணிக்காக விளையாடவில்லை. அத்தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மேலும், டெல்லிக்கு எதிரான ரஞ்சி கோப்பைப் போட்டியில் பெங்கால் அணிக்காக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், தேர்வாளர்கள் அவரைப் பரிசீலிக்கவில்லை. 2023-ல் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில்தான் ஷமி கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.


Click it and Unblock the Notifications


