Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ்.. 3 பேரும் செய்த சொதப்பல்.. பொளந்து கட்டிய தினேஷ் கார்த்திக்!

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இந்திய அணியின் 3 ஸ்பின்னர்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார். 3 வீரர்களும் இணைந்து 7 விக்கெட்டுகளை எடுத்தது இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் ஆட்டமிழந்த போதும், இந்திய அணிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால் நியூசிலாந்து அணியின் டெய்லண்டர்களை ரன்கள் குவிக்க வைத்தது இந்திய அணியை பாதித்தது.

ind vs nz ravichandran ashwin rohit sharma

அதேபோல் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் டெய்லெண்டர்கள் கொஞ்சம் கூட பேட்டிங்கில் பங்களிக்கவில்லை. இதனால் 54 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 462 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 107 ரன்களை மட்டுமே நிர்ணயிக்க முடிந்தது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸிலும் இந்திய ஸ்பின்னரக்ள் சொதப்பினார்கள்.

வழக்கமாக சொந்த மண்ணில் இந்திய ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இங்கிலாந்து மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் 3 ஸ்பின்னர்களும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இந்தப் போட்டியில் 3 ஸ்பின்னர்கள் இருவரும் 7 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தப்பட்டுள்ளது. ஜடேஜா, குல்தீப் தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரேயொரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசுகையில், என்னை பொறுத்தவரை இந்திய ஸ்பின்னர்களின் செயல்பாடுகள் குறித்து கவலை கொள்ள எதுவும் இல்லை. ஒரு குழுவாக இந்திய ஸ்பின்னர்களுக்கு சிறந்த டெஸ்ட் போட்டியாக அமையவில்லை. ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின் என்று மூன்று வீரர்களின் செயல்பாடுகள் மோசமாகவே இருந்தது. ஆனால் இப்படியொரு போட்டி அமைந்தததும் நன்மைக்கு தான்.

ஏனென்றால் அடுத்தப் போட்டியில் கவனமாக விளையாடுவார்கள். அதேபோல் இந்திய அணி கம்பேக் கொடுக்கும் போதெல்லாம், மிகப்பெரிய வெற்றியை பெறும். புனே மைதானமும் இந்திய ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் அஸ்வின், ஜடேஜாவுக்கு சிறந்த போட்டியாக இருக்கும்.

இந்த டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை, இந்திய அணியின் காம்பினேஷன் சரியாக என்ற குழப்பம் இருந்தது. அதனை 2வது டெஸ்ட் போட்டியில் சரி செய்வார்கள் என்று கருவதாக தெரிவித்துள்ளார். மேலும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் 5வது ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 21, 2024, 9:46 [IST]
Other articles published on Oct 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+