Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 5க்குள் வந்த ஜடேஜா.. ஜாகீர் கான், இஷாந்த் சர்மா சாதனை முறியடிப்பு!

மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டாப் 5க்குள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் கிளென் பிலிப்ஸின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக இந்த சாதனையை ஜடேஜா செய்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் டாம் லேதம் - டெவான் கான்வே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் கான்வே 4 ரன்கள் எடுத்திருந்த போது ஆகாஷ் தீப் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ind vs nz ravindra jadeja virat kohli

பின்னர் முதல் செஷனில் வாஷிங்டன் சுந்தரின் ஆதிக்கம் தொடங்கியது. டாம் லேதம் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரையும் மீண்டும் போல்டாக்கி வெளியேற்றினார். இதனால் நியூசிலாந்து அணி 72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மிட்சல் - வில் யங் கூட்டணி நியூசிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. 4வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த வில் யங் ஜடேஜாவின் சுழலில் சிக்கி 71 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த டாம் பிளெண்டல் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து வந்த கிளென் பிலிப்ஸ் 17 ரன்களில் போல்டாகி வெளியேற, நியூசிலாந்து அணி 187 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தது. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜடேஜா இந்திய அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார்.

அதேபோல் இந்த இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக ரவீந்திர ஜடேஜா புதிய சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் தலா 311 விக்கெட்டுகளுடன் 5வது இடத்தில் இருந்தனர்.

தற்போது 312 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜடேஜா அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார். இவருக்கு முன்பாக அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், 533 விக்கெட்டுகளுடன் அஸ்வின் 2வது இடத்திலும், 434 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் 3வது இடத்திலும், 417 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் 4வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இடதுகை ஸ்பின்னர் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, November 1, 2024, 14:58 [IST]
Other articles published on Nov 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+