பெங்களூரு : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக பாதியில் விலகி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் பிதாமகன் ஆக ரிஷப் பண்ட் விலகி வருகிறார்.
வெளிநாடுகளில் இந்தியா தடுமாறிய போதெல்லாம் இங்கிலாந்து,ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் ரிஷப் பண்ட், சதம் அடித்து அசத்திருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி ரிஷப் பந்த் உயிர் தப்பினார்.

இதில் அவருக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் ஒன்றை ஆண்டுகளுக்கு மேல் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த ரிஷப் பண்ட், நடப்பாண்டு தான் கிரிக்கெட் விளையாட தொடங்கி இந்திய அணியில் இடம் பிடித்தார்.ஐபிஎல் தொடரில் அபாரமாக விளையாடிய அவர் டி20 உலக கோப்பையில் இடம் பெற்றது மட்டுமல்லாமல் இந்திய அணி வெற்றி பெறவும் காரணமாக அமைந்தார்.
அதன் பிறகு வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பண்ட் அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார். இதன் மூலம் ரிஷப் பண்ட், மீண்டும் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறியது. 10 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறிய போது ரிஷப் பண்ட் களத்துக்கு வந்தார்.
மற்ற வீரர்கள் எல்லாம் தடுமாறிய போது பண்ட் மட்டும் அதிகபட்சமாக 20 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து பண்ட் விக்கெட் கீப்பிங் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பவுலர் வீசிய பந்தை பேட்ஸ்மேன் மிஸ் செய்ய அது நேராக ரிஷப் பண்டின் முட்டியில் பட்டது. ஏற்கனவே பண்ட், விபத்தில் சிக்கி அவருக்கு காலில் தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டது.
தற்போது அதே இடத்தில் பண்ட், பட்டதால் அவர் வலியால் துடித்தார். முதல் உதவி சிகிச்சை அளித்தும் அவரால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. இதனால் இரண்டு பேரின் உதவியுடன் கை தாங்கலாக மைதானத்தை விட்டு நடக்க முடியாமல் பண்ட் வெளியேறினார். இதனால் அவருக்கு பதில் துருவ் ஜூரலை விக்கெட் கீப்பிங் செய்ய வந்தார். இந்தியாவுக்கு அடுத்தடுத்து முக்கியமான டெஸ்ட் போட்டிகள் காத்துள்ள நிலையில் பண்ட்க்கு காயம் ஏற்பட்டிருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.