Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: உலக கிரிக்கெட்டிலேயே ஒரே வீரர் ரோகித் சர்மா.. நியூசிலாந்து போட்டியில் 2 ரெக்கார்ட்

வதோரா: சர்வதேச கிரிக்கெட்டில் 650 சிக்ஸர்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். வதோதராவில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 301 ரன்கள் இலக்கை துரத்தியபோது, ஏழாவது ஓவரின் மூன்றாவது பந்தில் இந்த மகத்தான மைல்கல்லை அவர் எட்டினார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் அதிக சிக்ஸர்களை அடித்த சாதனையை ரோஹித் கொண்டுள்ளார். அவர் 67 டெஸ்ட் போட்டிகளில் 88 சிக்ஸர்களையும், 159 டி20 போட்டிகளில் 205 சிக்ஸர்களையும், 280 ஒருநாள் போட்டிகளில் 357 சிக்ஸர்களையும் அடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா முதலிடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் தலைவர் கிறிஸ் கெய்ல் 553 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தையும், பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி 524 போட்டிகளில் 476 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மா இதுவரை 49 சிக்ஸர்களை அடித்துள்ளார். அந்த அணிக்கு எதிராக அப்ரிடி மட்டுமே ரோஹித்தை விட அதிக சிக்ஸர்களை (50) அடித்துள்ளார். அப்ரிடியை முந்த ரோஹித்துக்கு இந்தத் தொடரில் இன்னும் இரண்டு சிக்ஸர்கள் தேவை. இதே போன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த தொடக்க வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இதற்கு முன்பு ODI கிரிக்கெட்டில் 328 சிக்சர்களை விளாசி, வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் தான் அதிக சிக்சர் அடித்த தொடக்க வீரர் என்ற பெருமையை பெற்று இருந்தார். தற்போது 329 சிக்சர்கள் அடித்து ரோகித் சர்மா அந்த சாதனையை முறியடித்துள்ளார். 263 சிக்சர்களுடன் 3வது இடத்தில் ஜெயசூர்யாவும், 4வது இடத்தில் 174 சிக்சர்களுடன் நியூசிலாந்து வீரர் மார்டின் குப்திலும், 5வது இடத்தில் 167 சிக்சர்களுடன் சச்சின் டெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் உள்ளனர்.

தொடர்ந்து அதிரடி காட்டி வந்த ரோகித் சர்மா 29 பந்துகளில் அதைகத் சர்மா 26 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும். மறுபுறம், இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காராவை முந்தி இந்த மைல்கல்லை எட்டினார்.

Story first published: Sunday, January 11, 2026, 20:07 [IST]
Other articles published on Jan 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+