Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ - நியூசிலாந்து தொடரில் 3 சாதனைகள் படைக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு.. கோலியை முந்துகிறார்

மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வானிலை முன்னேறி வருவதால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிகிறது.

இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. இதனால் நியூசிலாந்துக்கு எதிராக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா இருக்கிறார்.

ind vs nz rohit sharma virat kohli cricket

இந்த தொடரில் ரோஹித் சர்மா மூன்று மிகப்பெரிய மைல்கல்லை தொட வாய்ப்பு இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். இந்திய அணி கடைசியாக 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது. அதன் பிறகு நடைபெற்ற அனைத்து டெஸ்ட் தொடரிலும் இந்தியா கைப்பற்றி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தொடர்ந்து 17 டெஸ்ட் தொடரை இந்தியா சொந்த மண்ணில் வென்று இருக்கிறது.

தற்போது நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் 18வது டெஸ்ட் தொடராக இருக்கும். இதுபோன்று ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 258 ரன்கள் விளாசினால் மாபெரும் சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது. ரோகித் சர்மா தற்போது உள்ள 2023-25 டெஸ்ட் சைக்கிளில் 742 ரன்கள் அடித்திருக்கிறார். ரோகித் சர்மா மட்டும் 258 ரன்கள் சேர்த்தால் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஆயிரம் ரன்களை தொடுவார்.

அது மட்டுமில்லாமல் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஆயிரம் ரன்களை தொட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதேபோன்று ரோகித் சர்மா தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 87 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். இன்னும் 13 சிக்சர் அவர் அடித்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுவார்.

இன்னும் ஐந்து சிக்சர்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். தற்போது சேவாக் 91 சிக்சர் உடன் முதலிடத்திலும் ரோஹித் சர்மா 87 சிக்ஸர் உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ரோகித் சர்மா தற்போது 12 வெற்றிகளை பெற்றிருக்கிறார். விராட் கோலி 14 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில் ரோகித் சர்மா மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் விராட் கோலியை முந்தி 15 வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.

Story first published: Wednesday, October 16, 2024, 12:32 [IST]
Other articles published on Oct 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+