For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர் தான் வெற்றிக்கு காரணம்.. நான் அடிச்ச அந்த 2 சிக்ஸ் இல்லை.. மனம் திறந்து பாராட்டிய ரோஹித் சர்மா!

Recommended Video

IND VS NZ 3RD T20 | Rohit Sharma expresses his excitement over Super Over

ஹாமில்டன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் ஓவர் வெற்றிக்கு தான் அடித்த இரண்டு சிக்ஸர்கள் காரணம் இல்லை. முகமது ஷமி வீசிய கடைசி ஓவர் தான் என பாராட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா.

மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. முதலில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி வெற்றிக்கு மிக அருகே இருந்தது.

எனினும், ஷமி வீசிய அபாரமான 20வது ஓவரால், போட்டி டை ஆனது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை தன் இரண்டு சிக்ஸர்களால் வீழ்த்தினார் ரோஹித் சர்மா. அதன் பின் தான், ஷமியை பாராட்டி பேசி இருக்கிறார் ரோஹித்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் டி20 தொடரை எளிதாக கைப்பற்றும் என்ற நிலையிலும், நியூசிலாந்து தோற்றால் டி20 தொடரை இழக்க நேரிடும் என்ற நிலையிலும் களமிறங்கின.

இந்தியா ஏமாற்றம்

இந்தியா ஏமாற்றம்

அடுத்து பேட்டிங் ஆடிய விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 17, மனிஷ் பாண்டே 14*, ஜடேஜா 10* ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 200 ரன்களை எட்டும் என எதிர்பார்த்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.

விக்கெட் வீழ்ச்சி

விக்கெட் வீழ்ச்சி

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்தில் 21 பந்துகளில் 31 ரன்கள் குவித்து மீண்டும் ஒரு நல்ல துவக்கம் அளித்தார். ஒருபுறம் கோலின் மன்றோ 14, சான்ட்னர் 9, கிராண்ட்ஹோம் 5 ரன்கள் எடுத்து வரிசையாக வெளியேறி வந்தனர்.

கேன் வில்லியம்சன் அதிரடி

கேன் வில்லியம்சன் அதிரடி

மறுபுறம் கேப்டன் கேன் வில்லியம்சன் நங்கூரம் போட்டு நின்று அதிரடி ஆட்டம் ஆடினார். கடைசி ஓவரில் அனுபவ வீரர்கள் ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இருந்தது நியூசிலாந்து.

முகமது ஷமி அபாரம்

முகமது ஷமி அபாரம்

முகமது ஷமி கடைசி ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் பந்தை சிக்ஸ் அடித்தார் டெய்லர். எனினும், அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் 95 ரன்கள் அடித்து இருந்த வில்லியம்சன் விக்கெட்டை சாய்த்தார். அடுத்த இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்தார்.

பரபர சூப்பர் ஓவர்

பரபர சூப்பர் ஓவர்

கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ராஸ் டெய்லர் விக்கெட்டையும் வீழ்த்தி போட்டி டை ஆக முக்கிய காரணமாக இருந்தார். அடுத்து நடந்த சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 17 ரன்கள் குவித்தது.

இரண்டு சிக்ஸர்கள் வெளுத்த ரோஹித்

இரண்டு சிக்ஸர்கள் வெளுத்த ரோஹித்

அடுத்து இந்தியா முதல் நான்கு பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் அடித்து பட்டையைக் கிளப்பினார். இந்தியா சூப்பர் ஓவரில் 20 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி20 தொடரையும் கைப்பற்றியது.

ஷமி தான் காரணம்

ஷமி தான் காரணம்

இந்த நிலையில், ரோஹித் சர்மா தான் வெற்றிக்கு காரணம் என பலரும் கூறினாலும், போட்டிக்குப் பின் பேசிய ரோஹித் சர்மா, ஷமியின் அபார ஆட்டம் குறித்து பேசினார். ஷமியின் கடைசி ஓவர் தான் முக்கியமானது. எனது இரண்டு சிக்ஸர்கள் இல்லை. ஷமியின் ஓவரில் தான் நாங்கள் 9 ரன்களை தடுத்தோம். பனி பெய்த நிலையில் அது எளிது இல்லை" என்றார்.

ரோஹித் பாராட்டு

ரோஹித் பாராட்டு

"ஒரு வீரர் 95 ரன்கள் எடுத்து ஆடி வந்தார். மற்றொருவர் மிகப் பெரும் அனுபவம் வாய்ந்த வீரர் ஷமி அந்த ஓவரை அபாரமாக வீசி, போட்டியில் எங்களை மீண்டும் அழைத்து வந்து, சூப்பர் ஓவர் ஆட வைத்தார்" என்று கடைசி ஓவர் குறித்து கூறினார் ரோஹித் சர்மா.

Story first published: Thursday, January 30, 2020, 11:51 [IST]
Other articles published on Jan 30, 2020
English summary
IND vs NZ : Rohit Sharma lauded the efforts of Mohammed Shami in last over
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+