Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: கேப்டன் இது டி20 மேட்ச் இல்லை.. அதிரடியாக ஆடியதால் வந்த வினை.. சொதப்பிய ரோஹித் சர்மா

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இந்த தொடரில் 6 இன்னிங்க்ஸ்களில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா மொத்தம் 91 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

அவர் இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமான சாதனையை பதிவு செய்து இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 29.40 ஆக உள்ளது. அவர் 2019 முதல் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக விளையாடி வருகிறார். அப்போது முதல் இதுவரை ஒரே ஆண்டில் அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரி 30க்கு கீழ் சென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ind vs nz india rohit sharma

முதன் முறையாக அவர் துவக்க வீரராக ஆடத் துவங்கிய பின் மிக மோசமான பேட்டிங் சராசரியை பதிவு செய்து இருக்கிறார். குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் அவரது பேட்டிங் சராசரி மூன்று போட்டிகளின் முடிவில் 15.16 உள்ளது. இத்தனைக்கும் இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா மிகச்சிறந்த பேட்டிங்கை ஆடி இருந்தார்.

அவரது கிரிக்கெட் கேரியரிலேயே சிறந்த டி20 பேட்டிங் சராசரியை அவர் இந்த ஆண்டு பதிவு செய்து இருந்தார். இந்த ஆண்டு டி20 போட்டிகளில் அவரது சராசரி 36.13 ஆக இருந்தது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 154.66 ஆக இருந்தது. இதுவே ஒரே ஆண்டில் அவரது மிக அதிகபட்ச டி20 பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆகும்.

டி20 போட்டிகளை போன்றே டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக ஆட நினைக்கும் ரோஹித் சர்மா அதில் மோசமாக செயல்பட்டு இருக்கிறார். அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட உள்ள நிலையில் அவர் டி20 பாணி ஆட்டத்தை விடுத்து, டெஸ்ட் போட்டியை நிதானமாக ஆட வேண்டும் என்பதையே அவரது டி20 மற்றும் டெஸ்ட் பேட்டிங் சராசரி ஒப்பீடு சுட்டிக் காட்டுகிறது.

ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸில் 11 ரன்னில் ஆட்டம் இழந்த பின் இந்திய வீரர்கள் வரிசையாக விக்கெட்டை பறிகொடுத்தனர். 71 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்களை இழந்தது. 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தடுமாறியது. ரிஷப் பண்ட் தனி ஆளாக போராடி அரை சதம் அடித்தார்.

Story first published: Sunday, November 3, 2024, 12:10 [IST]
Other articles published on Nov 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+