For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ- கோலி மீது பழியை போட்ட ரோகித் சர்மா.. ரிஷப் பண்ட் காயம் குறித்தும் அப்டேட்

பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறது. இதில் இந்திய அணி பல தவறுகளை செய்திருக்கிறது. டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யாமல் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தது தான் பெரிய பிரச்சனைக்கு காரணமாக இருந்தது.

அது மட்டும் அல்லாமல் பேட்டிங் வரிசையில் தவறு பேட்ஸ்மேன்கள் சில ஷார்ட்டுகளை அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழந்தது போன்ற பல தவறுகள் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் தவறிவிட்டேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.

ind vs nz rohit sharma virat kohli

அப்போது செய்தியாளர்கள் கில் காயம் அடைந்துள்ள நிலையில் விராட் கோலியை நம்பர் மூன்றாவது இடத்தில் களமிறங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள். தொடக்க வீரராக கேஎல் ராகுல் ஏற்கனவே விளையாடி உள்ள நிலையில் அவரை நடு வரிசையில் விளையாட வைப்பதற்கு பதில் அவரை மூன்றாவது இடத்திற்கு அனுப்பி இருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கேப்டன் ரோஹித் சர்மா , கில் காயம் அடைந்த நிலையில் சர்பஸாஸ் கானின் அணிக்கு கொண்டு வந்தோம்.கேஎல் ராகுல் தற்போது தான் நடு வரிசையில் ஆறாவது இடத்தில் களமிறங்கி செட்டில் ஆகி இருக்கிறார். நாங்கள் ராகுலை 5 அல்லது ஆறாவது இடத்தில் தொடர்ந்து விளையாட வைக்க நினைக்கின்றோம். திடீரென்று இந்த போட்டிக்காக அவருடைய பேட்டிங் பொறுப்பை மாற்ற நான் விரும்பவில்லை.

இதே போல் தான் சர்பராஸ்கானுக்கும் வாய்ப்பு வழங்க நினைத்தோம். ஆனால் விராட் கோலி தான் அணியின் சீனியர் வீரராக தான் கில் இல்லாத நிலையில் அவருடைய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறினார். அணியின் சீனியர் வீரர்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் நல்ல விஷயமாக நான் பார்க்கிறேன். கோலியே சொன்ன பிறகு நான் அவரை மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பினேன் என்று ரோகித் சர்மா கூறினார்.

இதேபோன்று ரிஷப் பண்ட்க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட அதே இடத்தில் பந்து பட்டது. இதனால் அவருக்கு வீக்கம் ஏற்பட்டிருக்கிறது. ரிஷப் பன்ட் எங்கள் அணியின் முக்கியமான வீரர். அவரை வைத்து நாங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் தான் பண்ட்க்கு ஓய்வு வழங்கினோம். இன்று இரவு அவருடைய காயம் எப்படி இருக்கிறது என்று பார்த்து நாளை அவர் களமிறங்குவாரா இல்லையா என்பதை முடிவு செய்வோம் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Thursday, October 17, 2024, 21:48 [IST]
Other articles published on Oct 17, 2024
English summary
IND vs NZ - Rohit sharma reveals about kohli promotion and Rishabh pant injury update கோலி மீது பழியை போட்ட ரோகித் சர்மா.. ரிஷப் பண்ட் காயம் குறித்தும் அப்டேட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+