For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ: மீண்டும் குல்தீப் யாதவை திட்டிய ரோஹித் சர்மா.. அடுத்த நிமிடமே நடந்த அதிசயம்

வதோதரா: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது ஒருபக்கம் இருக்க, மைதானத்தில் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு எடுத்த "கிளாஸ்" சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஃபீல்டிங்கில் சொதப்பிய குல்தீப்பை ரோஹித் சர்மா மைதானத்திலேயே கண்டித்ததும், அதற்குப் பிறகு நடந்த சம்பவம் என்ன என்று பார்க்கலாம்.

நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, குல்தீப் யாதவ் ஃபீல்டிங்கில் சற்று மெத்தனமாக செயல்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடுப்பான ரோஹித் சர்மா, குல்தீப்பை நோக்கிச் சென்று கைகளை ஆட்டி, மிகவும் கண்டிப்பான முறையில் அறிவுரை வழங்கினார். ரோஹித் முகபாவனையைப் பார்க்கும்போது, அவர் குல்தீப்பைத் திட்டுவது போலவும், "எப்படி பந்துவீச வேண்டும், எங்கே ஃபீல்டிங் நிற்க வேண்டும்" என்று பாடம் எடுப்பது போலவும் இருந்தது.

IND vs NZ Rohit Sharma Scolds Kuldeep Yadav on Field in India vs New Zealand 1st ODI

ரோஹித் சர்மாவுக்கும் குல்தீப் யாதவுக்கும் எப்போதுமே மைதானத்தில் இதுபோன்ற "செல்லச் சண்டைகள்" நடப்பது வழக்கம் தான். ரோஹித் திட்டுவதும், குல்தீப் அதை ஏற்றுக்கொள்வதும் பலமுறை நாம் பார்த்திருக்கிறோம்.

ரோஹித் சர்மாவிடம் டோஸ் வாங்கிய உடனேயே குல்தீப் யாதவ் சுதாரித்துக் கொண்டார். ரோஹித் சொன்ன அறிவுரையின்படியே பந்துவீசிய குல்தீப், அடுத்த சில நிமிடங்களிலேயே நியூசிலாந்தின் அதிரடி வீரர் கிளென் பிலிப்ஸை 12 ரன்களில் வீழ்த்தினார். பிலிப்ஸ் அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் கவரில் லாவகமாகப் பிடித்தார். "ரோஹித் பேச்சைக் கேட்டால் விக்கெட் கன்ஃபார்ம்" என்று ரசிகர்கள் இந்த சம்பவத்தை சுட்டிக் காட்டி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் இந்தியா 301 ரன்களைத் துரத்திய போது, ரோஹித் சர்மா அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். 29 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் விளாசிய அவர், கைல் ஜேமிசன் பந்துவீச்சில் எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை என்றாலும், ரோஹித் தனது இயல்பான ஆட்டத்தை ஆடியது ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கிறது. சமீபத்தில் விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணிக்காக அவர் 155 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

குல்தீப் யாதவ் தனது 9 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 84 ரன்கள் குவித்தார். இந்தியத் தரப்பில் சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Story first published: Monday, January 12, 2026, 14:14 [IST]
Other articles published on Jan 12, 2026
English summary
IND vs NZ: Rohit Sharma Scolds Kuldeep Yadav on Field in India vs New Zealand 1st ODI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+