Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- சர்பராஸ் கானை பொளக்கும் ரசிகர்கள்.. இதுக்கு ராகுலே ஓகே.. 4 இன்னிங்சில் தொடரும் தடுமாற்றம்

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் கடுமையாக தடுமாறி வருகிறார்கள். சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திணறி வரும் நிலையில் முதல் டெஸ்டில் அபாரமாக விளையாடிய சர்பராஸ் கடந்த நான்கு இன்னிங்ஸ்களாக பெரிய அளவில் சாதிக்கவில்லை.

ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டும் என்ற கட்டத்தில் விளையாடி வரும் இந்திய அணியில் முதல் இன்னிங்ஸில் சர்பராஸ்கான் டக்அவுட் ஆகி வெளியேறினார். இந்த சூழலில் இரண்டாவது இன்னிங்ஸிலாவது தனது சொந்த மண்ணான மும்பையில் சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

ind vs nz sarfaraz khan rohit sharma virat kohli

கேஎல் ராகுல் சரியாக விளையாடவில்லை என்பதால் தான் முதல் டெஸ்டில் 150 ரன்கள் விளாசிய சர்ஃப்ராஸ்கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.ஆனால் சர்பராஸ் கான் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களின் ஒரு தரப்பினரை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. இதனால் சர்பராஸ் கானை தொடர்ந்து ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

சர்பராஸ் சரியாக விளையாடுவதில்லை என்றும் ஆனால் அவருக்கு ஊடகம் துணை நிற்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். சர்பராஸ்க்கு பதில் கேஎல் ராகுலையாவது சேர்த்திருக்கலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் சர்பராஸ் கானுக்கு ஆதரவும் கிளம்பி இருக்கிறது. மற்றொரு தரப்பினர் சர்பராஸ்கான் மட்டும் சரியாக விளையாடவில்லை என்று சொல்வது நியாயம் இல்லை என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களும் தடுமாறி வரும் நிலையில் முதல் டெஸ்டில் 150 ரன்கள் விளாசிய சர்பராஸ்கான் மீது மட்டும் குறி வைத்து விமர்சனங்கள் எழுப்பப்படுவது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.சர்பராஸ் கான் ஒரு இன்னிங்ஸில் தடுமாறினாலும் கூட அவருக்கு எதிராக விமர்சனங்கள் தொடர்ந்து ஒரு தரப்பினரால் வைக்கப்படுகிறது.

இது தேவையில்லாத நெருக்கடியை சர்பராஸ்கானுக்கு ஏற்படுத்துவதாகவும், ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் சர்பராஸ்கான் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாமல் தொடர்ந்து கிரிக்கெட்டிலே கவனம் செலுத்தி ரன்கள் சேர்க்க வேண்டும் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தேவையில்லாத ஷாட்களை ஆடி விக்கெட்டுகளை இழக்கக்கூடாது என்றும் அவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

Story first published: Sunday, November 3, 2024, 12:54 [IST]
Other articles published on Nov 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+