Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ - இந்திய அணியின் நட்சத்திர வீரருக்கு காயம்.. சர்பிராஸ் கான் களமிறங்க அதிக வாய்ப்பு

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரில் தொடங்கப்பட உள்ள நிலையில் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் தற்போது சென்னையில் போல் மழை பெய்து வருகிறது. இதனால் இந்திய அணியின் பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது பெங்களூரில் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

ind vs nz sarfaraz khan shubman gill rohit sharma


இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கில் கழுத்து பகுதியில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக விளையாட மாட்டார் என தெரிகிறது. இது தொடர்பாக வெளியான செய்திகள் கேஎல் ராகுலுக்கு தசை பிடிப்பு பகுதி கழுத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் வலியால் அவதிப்பட்டு வருகிறார் என தெரிகிறது.

கில்லும் பிசியோ நிபுணர்கள் சிகிச்சை அளித்தும் அவர் நினைத்தபடி முழு உடல் தகுதியை பெறவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக கில், முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்த உத்வேகத்தில் இருந்த கில்லுக்கு தற்போது இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை கில் இந்திய அணியில் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக சர்பிராஸ் இடம் பெறுவார்.

ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் சர்பிராஸ் கான் அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்த நிலையில், கே எல் ராகுல் அணிக்குள் வந்ததால் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். எனினும் மனம் தளராத சர்பராஸ் கான் இராணி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

இதனால் கில் நாளைய டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்றால் அவருக்கு பதிலாக சர்பராஸ்கான் விளையாடுவார் என தெரிகிறது. எனினும் மூன்றாவது வீரராக சர்பராஸ் விளையாடுவாரா இல்லை கே எல் ராகுல் மூன்றாவது வீரராகவும் ஐந்தாவது வீரராக சர்பராஸ்கானும் விளையாடுவாரா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. கில் உடல் தகுதி குறித்து போட்டி தொடங்குவதற்கு முன்புதான் பெரியவரும். ஆனால் நாளைய போட்டியில் டாஸ் திட்டமிட்டபடி வீசப்படும் என்று தெரியவில்லை.

Story first published: Tuesday, October 15, 2024, 18:37 [IST]
Other articles published on Oct 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+