Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- என்ன நம்புங்க அண்ணே! டிஆர்எஸ் எடுக்க சொல்லி ரோகித்திடம் கெஞ்சிய சர்பிராஸ் கான்

புனே : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் கான் டிஆர்எஸ் எடுக்க கோரி ரோகித் சர்மாவிடம் கெஞ்சிய சம்பவம் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்று கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன் அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாத்தம், 15 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

ind vs nz sarfaraz khan rohit sharma drs

இதன் அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு கான்வே மற்றும் வில் யங் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். 45 பந்துகளில் யங் 18 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் பண்டிடம் கேட்ச் ஆனார். எனினும் இதற்கு நடுவர் அவுட்டு தரவில்லை. இதனால் டிஆர்எஸ் முடிவு கேட்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ரோகித் சர்மா இருந்தார்.

கேட்சை பிடித்த ரிஷப் பண்ட்கே வில்லியன்தின் கையில் பட்டதா என்று தெரியவில்லை. இதனால் அவரும் சந்தேகத்துடன் இருந்தார். விக்கெட் கீப்பரை சந்தேகத்துடன் இருக்கும்போது பவுலரால் என்ன செய்ய முடியும் என அஸ்வின் குழப்பத்தில் நின்று கொண்டிருந்தார். ஆனால் ஷார்ட் லேக்கில் நின்று கொண்டிருந்த சர்பராஸ்கான் ரோகித் சர்மாவிடம் சென்று இது அவுட்டுதான் பந்து பேட்ஸ்மேன் கையில் பட்டதை நான் பார்த்தேன். உடனடியாக drs எடுங்கள் என்று வற்புறுத்தி கூறினார்.

ஆனால் ரோகித் சர்மா மனம் இறங்கவில்லை. ஆனால் சர்பராஸ் கான், என்னை நம்புங்கள். டிஆர்எஸ் எடுங்கள் என்று தொடர்ந்து கெஞ்சினார். உடனே விராட் கோலியின் பந்து பேட்ஸ்மேனின் கையில் பட்டது போல் தான் தெரிந்தது என கூறினார். இதனை அடுத்து சர்பராஸ்கானின் பேச்சைக் கேட்டு ரோகித் சர்மா டி ஆர் எஸ் முடிவு எடுத்தார். இதன் அடுத்து ரிப்ளேவில் பந்து பேட்ஸ்மேனின் கையில் பட்டு தான் ரிஷப் பண்டிடம் கேட்ச் ஆனது தெரியவந்தது.

இதனை அடுத்து வில் யங் அவுட் என அறிவிக்கப்பட்டார். விக்கெட் கீப்பரே கேட்ச் ஆனதா இல்லையா என தடுமாறியபோது சர்பராஸ் கான் பில்டிங்கில் கவனமாக இருந்து அவுட் ஆன் என ரோகித்தை வற்புறுத்திய சம்பவம் ரசிகர்களை கவர்ந்தது. இந்த நிலையில் ஜடேஜா வீசிய ஓவரில் எல்பிடபிள்யூ ஆகாத நிலையில் பண்ட் தேவையில்லாமல் drs முடிவை எடுக்க சொன்னார். ஆனால் அது நாட் அவுட் என தெரிய வந்தது. இதனால் ரோகித் சர்மா கடுப்பானார்.

Story first published: Thursday, October 24, 2024, 12:04 [IST]
Other articles published on Oct 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+