Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ஃபராஸ் கானை அழைத்து செல்லுங்கள்.. கம்மின்ஸ்-க்கு தலைவலியாக இருப்பார்.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

மும்பை: ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சர்ஃபராஸ் கான் இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் தாக்கு பிடிக்கும் அளவிற்கான டெக்னிக் சர்ஃபராஸ் கானிடம் இருப்பதாக கூறியுள்ள அவர், நிச்சயம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இருந்தாலும் இந்திய அணியின் இளம் வீரர்களான சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இருவரின் ஆட்டமும் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடி சதம் விளாசி அசத்தி இருப்பதால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

ind vs nz sarfaraz khan rohit sharma

அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணிலும் சர்ஃபராஸ் கானை முதல் போட்டியில் இருந்தே களமிறங்க வேண்டும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. இந்திய மண்ணில் மட்டுமல்லாமல், அவரிடம் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு மைதானங்களிலும் தாக்கு பிடிக்கும் அளவிற்கு திறமை இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதேபோல் ஃபிட்னஸிலும் சர்ஃபராஸ் கான் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சர்ஃபராஸ் கான் விளையாடியது எனக்கு பிடித்திருந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் இப்படியான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி இருந்தார். பெங்களூர் மைதானத்தின் பிட்ச் இந்திய மைதானங்களை போல் செயல்படவில்லை. கொஞ்சம் கூடுதல் வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்தது.

அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியா மைதானங்களில் பேஸ் அல்லது சீம் இல்லாமல் இருந்தால், சர்ஃபராஸ் கான் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்வார். ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் எப்போதும் கூடுதல் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும். அதற்கான லெந்தில் சர்ஃபராஸ் கான் விளையாடி தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும்.

ஆஸ்திரேலியா பவுலர்கள் மட்டும் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் கொஞ்சம் ஷார்ட் லைனில் பந்துவீசினால், சர்ஃபராஸ் கானால் அவர்களுக்கு தலைவலியை கொடுக்க முடியும். ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவதற்கான டெக்னிக் சர்ஃபராஸ் கானிடம் இருக்கிறது. ஏனென்றால் லைனை பார்த்து விளையாடுகிறார். அதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்திய பிளேயிங் லெவனில் சர்ஃபராஸ் கான் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, October 21, 2024, 7:39 [IST]
Other articles published on Oct 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+