தவறு! கொஞ்சம் கூட சரி இல்ல.. சதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சாஹல் மனைவி தனஸ்ரீ பக்கம் திரும்பிய கேமரா
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து இரண்டாவது சதத்தை இன்று பூர்த்தி செய்தார்.
அதுவும் நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி சுயநலம் இன்றி அணிக்காக விளையாடி ரன்களை சேர்த்தார்.

ஸ்ரேயாசின் இந்த அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணியின் ஸ்கோர் 50 ஓவர் முடிவில் 397 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டியது. 70 பந்துகளை எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் சேர்த்தார். இதில் 8 சிக்சர்களும், நான்கு பவுண்டரிகளும் அடங்கும். பொதுவாக வீரர்கள் யாரேனும் சதம் அடித்தால் அவர்களுடைய உறவினர்கள் அல்லது அவர்களுடைய மனைவிமார்கள் ஆகியவர்களை தான் கேமராமேன்கள் காட்டுவார்கள்.
இல்லை என்றால் ரசிகர்களை காட்டுவார்கள்.ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்தவுடன் சாகல் மனைவியை கேமராமேன்கள் காட்டியது சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலின் மனைவியான தனஸ்ரீயை ஸ்ரேயாஸ் காதலிப்பதாகவும் இருவரும் முறை தவறிய உறவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதனை வைத்து ரசிகர்கள் பல கிண்டல்களையும் செய்து விட்டார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் எதுவும் உண்மை இல்லை என தனஸ்ரீ பலமுறை கூறிவிட்டார். தம் மனைவி மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு சாகலும் மறுப்பு தெரிவித்து இருந்தார். நிலைமை இப்படி இருக்க இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் சதம் அடித்த உடனும், அரை சதம் அடித்த உடனும் சாகலின் மனைவி தனுஸ்ரீக்கு கேமராமேன்கள் குளோசப் போனது முகம் சுளிக்க வைத்தது.
இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள். ஒரு சர்ச்சை ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு கேமராமேன்கள் காட்டலாமா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். இதே போல் கில் பவுண்டரி அடிக்கும் போதெல்லாம் சச்சினின் மகளான சாரா பக்கம் கேமராமேன் திரும்பியது. இதனையும் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications