Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: "வைபவை தூக்கிட்டு இந்த தமிழக வீரரை எடுங்க.. அப்போதான்..".. பத்ரிநாத் கொடுத்த அதிரடி யோசனை

சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது சர்வதேச டி20 போட்டியில், 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் வலியுறுத்தியுள்ளார். இஷான் கிஷன் காயம் காரணமாக விலகியிருந்தாலும் கூட, ஒரு பேட்டருக்குப் பதிலாக ஒரு முழுநேர பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வருவதே இந்திய அணிக்கு கூடுதல் பலத்தைத் தரும் என்று அவர் அதிரடி யோசனை தெரிவித்துள்ளார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய பத்ரிநாத், "2-வது போட்டியில் 3-வது வரிசையில் களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். தற்போது திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் நமன் திர் என பின்வரிசை பேட்டர்கள் அனைவருமே மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். பேட்டிங் செய்ய இவ்வளவு பலமான வீரர்கள் இருக்கும்போது, எதற்காக வைபவை 3-வது இடத்தில் ஆட வைக்க வேண்டும்? அவருக்குப் பதிலாக வருண் சக்கரவர்த்தியை களமிறக்கினால் பந்துவீச்சு வலிமை பெறும். முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து குவித்த 220 மற்றும் 180 ரன்களை, வருண் போன்ற மிரட்டலான பவுலர் இருந்தால் 200 மற்றும் 160 ரன்களாக எளிதில் கட்டுப்படுத்தியிருக்கலாம்" என்று கூறினார்.

IND vs NZ T20 Drop Vaibhav Suyavanshi Bring in Varun Chakravarthy - Badrinath Suggests Tactical Change for 3rd T20I

வைபவை தொடக்க வீரராகக் கொண்டு வருவதற்காக சஞ்சு சாம்சனை 3-வது வரிசைக்கு இறக்குவதையும் பத்ரிநாத் கடுமையாக எதிர்த்தார். "தொடக்க ஆட்டக்காரராக கலக்கி வரும் சஞ்சு சாம்சனை பின்னுக்குத் தள்ளுவது அப்பட்டமான அநீதியாகும். ஐபிஎல் தொடரில் 3-வது வரிசையில் சஞ்சு சாம்சன் 3,096 ரன்களைக் குவித்திருந்தாலும், சர்வதேச அரங்கில் அவரது தொடக்க ஜோடியைக் கலைக்கக் கூடாது. வைபவை எப்படியாவது உள்ளே திணிக்க வேண்டும் என்பதற்காக சஞ்சு சாம்சனை பலிகடா ஆக்குவது முற்றிலும் தவறான முடிவு" என்றார்.

IND vs NZ: 120 கிமீ காற்று, 87% மழை.. 3-வது டி20 நடக்கும் வெலிங்டன் வானிலை அறிக்கை இதுதான்!

IND vs NZ: 120 கிமீ காற்று, 87% மழை.. 3-வது டி20 நடக்கும் வெலிங்டன் வானிலை அறிக்கை இதுதான்!

பேட்டர்தான் தேவை என்றால் குமார் குஷாக்ராவை 3-வது வரிசையில் களமிறக்கலாம் என்றும் அவர் கூறினார். வெலிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வென்று தொடரை முன்கூட்டியே கைப்பற்ற இந்தியா தயாராகும் வேளையில், பத்ரிநாத்தின் இந்த அதிரடி ஆலோசனை புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

IND vs NZ: முக்கிய வீரர் வெளியேறியதால் வைபவுக்கு மீண்டும் ஜாக்பாட்.. 3-வது டி20 பிளேயிங் 11!

Also Read

IND vs NZ: முக்கிய வீரர் வெளியேறியதால் வைபவுக்கு மீண்டும் ஜாக்பாட்.. 3-வது டி20 பிளேயிங் 11!
Story first published: Tuesday, October 27, 2026, 10:13 [IST]
Other articles published on Oct 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+