Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: அகமதாபாத்தில் ராசியே இல்ல.. வேறு ஹோட்டலுக்கு மாறிய இந்திய அணி

அகமதாபாத்: டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொள்ளும் நிலையில், பிசிசிஐ) மூன்றாவது டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அணியின் உதவியாளர் குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர் ஒருவர், இந்திய அணி விளையாடிய அனைத்து மைதானங்களிலும் சிறப்பு பூஜை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், அரையிறுதிப் போட்டிக்கு முன், சந்திர கிரகணத்தின் போது பயிற்சி செய்வதை தவிர்க்கும் நோக்கில், இந்திய அணி மும்பையில் தனது பயிற்சியை 45 நிமிடங்கள் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அகமதாபாத்தில் இந்திய அணியின் ஹோட்டலை பிசிசிஐ மாற்றியுள்ளது.

அகமதாபாத்தில் குறிப்பிட்ட ஹோட்டலில் தங்கியிருந்தபோது இந்திய அணி 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் இந்த ஆண்டு சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தன. இதனால் அதிர்ஷ்டம் இல்லை என்பதற்காக தற்போது ஹோட்டலை இந்திய அணி நிப்வபகம் மாற்றி இருக்கிறது.

இறுதிப் போட்டிக்கு பிட்ச் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவிடம் கருப்பு மண் பிட்ச்சில் தோற்ற பிறகு, இந்திய அணி நிர்வாகம் சிவப்பு மண் பிட்ச்சை தேர்வு செய்துள்ளது. மோடி மைதானம் சிவப்பு, கருப்பு மற்றும் இரண்டும் கலந்த மூன்று வகையான ஆடுகளங்களை வழங்குகிறது.

வான்கடே மைதானத்தில் சிவப்பு மண் பிட்ச்கள் மட்டுமே உள்ளன. அங்கு இந்தியாவின் சிறந்த பேட்டிங் செயல்பாடு, சிவப்பு மண் பிட்ச்சை தேர்வு செய்யப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, நரேந்திர மோடி மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்களைப் மகிழ்விக்க பல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமி விருது வென்ற பியூர்டோ ரிக்கோ பாடகர் ரிக்கி மார்ட்டின், 'தண்டியா ராணி' ஃபால்குனி பதக் மற்றும் பாலிவுட் பின்னணிப் பாடகர் சுக்விந்தர் சிங் ஆகியோர் இதில் அடங்குவர்.

டாஸ் போடப்படுவதற்கு முன், ஐசிசி ஒரு இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்துள்ளது. ரிக்கி மார்ட்டினின் பிரபலமான 'அன் டோஸ் ட்ரெஸ் ஒன் டூ த்ரீ மரியா' பாடலுக்கு ரசிகர்கள் நடனமாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இறுதிப் போட்டிக்காக அகமதாபாத் செல்லும் ரசிகர்களின் பெரும் தேவையைப் பூர்த்தி செய்ய, போட்டி நாளில் மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு ரயில்வே ஒரு சிறப்பு ரயிலை இயக்கவுள்ளது. விமானக் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், இது ரசிகர்களுக்கு வசதியான மற்றும் மலிவு விலையிலான பயணத்தை வழங்கும்.

Story first published: Saturday, March 7, 2026, 7:15 [IST]
Other articles published on Mar 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+