Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: கடைசி ஓவர் வரை டென்சன்.. ஆட்டத்தை மாற்றிய நமன்.. திலக், நிதிஷ் அதிரடியால் இந்தியா வெற்றி

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில், இந்திய அணி கடைசி ஓவர் வரை சென்று 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்த இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. அத்துடன், தனது வரலாற்று சிறப்புமிக்க 300-வது சர்வதேச டி20 போட்டியில் களம் கண்டு, 200-வது வெற்றியைப் பதிவு செய்த உலகின் முதல் அணி என்ற பிரம்மாண்ட சாதனையை இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது.

IND vs NZ Tilak Varma and Nitish Kumar Reddy Star as India Clinch Thrilling 4-Wicket Win Over New Zealand in 2nd T20I

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, கிளென் பிலிப்ஸ் (70 ரன்கள்) மற்றும் பெவோன் ஜேக்கப்ஸ் (58 ரன்கள்) ஜோடியின் அபார ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னரின் சுழலில் சிக்கி 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தோல்வியை நோக்கிச் சென்றது.

சஞ்சு சாம்சன் 14, அபிஷேக் சர்மா 27, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 4, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். இடையே ஆறாம் வரிசையில் வந்த நமன் திர் 17 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். 17 ஓவர்கள் முடிவில் இந்தியா 135/6 எனத் தள்ளாடியது. கடைசி 18 பந்துகளில் வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான சூழலில், திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றியது. குறிப்பாக 19-வது ஓவரில் நாதன் ஸ்மித் பந்துவீச்சில் திலக் வர்மா வானவேடிக்கை காட்டி இமாலய சிக்சர் அடிக்க, அந்த ஓவரில் மட்டும் இந்திய அணி 18 ரன்களை குவித்தது.

IND vs NZ: கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு அடுத்து இந்தியா மட்டுமே செய்த பிரம்மாண்ட உலக சாதனை!

IND vs NZ: கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு அடுத்து இந்தியா மட்டுமே செய்த பிரம்மாண்ட உலக சாதனை!

கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஜேக்கப் டஃபி வீசிய 20-வது ஓவரில் துணிச்சலாக ஆடிய திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்கள் குவித்து தனது அரைசதத்தை எட்டினார். 19.5-வது பந்தில் நிதிஷ் குமார் ரெட்டி நேர்த்தியாக 2 ரன்கள் தட்டிவிட்டு இந்தியாவை 181/6 ரன்களுடன் வெற்றி பெற வைத்தார். நிதிஷ் 13 பந்துகளில் 26 ரன்கள் குவித்து இருந்தார். நியூசிலாந்தின் கையில் இருந்த வெற்றியை கடைசி நொடியில் தட்டிப்பறித்து இந்திய அணி தனது 200வது டி20வெற்றியை பெற்றது.

Story first published: Saturday, October 24, 2026, 16:28 [IST]
Other articles published on Oct 24, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+