Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"வைபவ் சூர்யவன்ஷிக்கு ஜீரோ போட மனசு வரல அதனால்..".. ஒழுங்கா ஆடாத பையனை வறுத்தெடுத்த அஸ்வின்

சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது சர்வதேச டி20 போட்டியில் இந்திய வீரர்களின் ஆட்டத் திறனை 1 முதல் 10 வரை மதிப்பெண் கொடுத்து மதிப்பிட்ட முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு 10-க்கு வெறும் 1 மதிப்பெண் மட்டுமே வழங்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் போட்டிக்குப் பிந்தைய விவாதத்தில் பேசிய அஸ்வின், பேட்டிங்கில் சொதப்பிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கும் வெறும் 2 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதே சமயம் இரண்டு வீரர்களுக்கு மட்டும் 10 மதிப்பெண்களை முழுமையாக வழங்கி உள்ளார்.

இஷான் கிஷனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 3-வது வரிசையில் களமிறக்கப்பட்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 181 ரன்கள் இலக்கை துரத்திய போது 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து திணறி ஆட்டமிழந்தார். இதுபற்றிப் பேசிய அஸ்வின், "அபிஷேக் சர்மாவின் அதிரடியான தொடக்க ஆட்டத்திற்கு 9 மதிப்பெண் வழங்குவேன். சஞ்சு சாம்சனுக்கு 3 மதிப்பெண். வைபவ் சூர்யவன்ஷிக்கு 1 மதிப்பெண் மட்டுமே தருகிறேன். எனக்கு யாருக்கும் ஜீரோ போடப் பிடிக்காது என்பதால் மட்டுமே இந்த 1 மதிப்பெண். 11 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வாங்கியதும் 2 மதிப்பெண் தான்" என்று கடுமையாக விமர்சித்து பேசினார் அஸ்வின்.

IND vs NZ Vaibhav Suryavanshi got 1 out of 10 rating from Ravichandran Ashwin After India s T20I Win Over New Zealand

அதேசமயம் தோல்வியின் விளிம்பில் நின்ற இந்திய அணியை அசாத்திய ஆட்டத்தால் மீட்டு வெற்றிக்கு அழைத்துச் சென்ற மிடில் ஆர்டர் பேட்டர்களான திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவருக்கும் தலா 10 மதிப்பெண்களை அஸ்வின் முழுமையாக வழங்கினார். இவர்களது ஆட்டத்தை பாராட்டிய அவர், ஆல்ரவுண்டர் நமன் திர்க்கு 8 மதிப்பெண்களும், அபாரமாகப் பந்துவீசி எதிரணியை மிரட்டிய அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோருக்கு தலா 9 மதிப்பெண்களும் வழங்கினார்.

1 ரன்னில் இரட்டை சதம் மிஸ்.. ஆட்டத்தையே மாற்றிய தேவ்தத் படிக்கல்.. நியூசிலாந்து மண்ணில் அபார ஆட்டம்

1 ரன்னில் இரட்டை சதம் மிஸ்.. ஆட்டத்தையே மாற்றிய தேவ்தத் படிக்கல்.. நியூசிலாந்து மண்ணில் அபார ஆட்டம்

மறுபுறம் பந்துவீச்சில் 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கிய அனுபவ வீரர் புவனேஸ்வர் குமார் மற்றும் பேட்டிங்கில் ஏமாற்றிய அக்சர் படேல் ஆகிய இருவருக்கும் தலா 2 மதிப்பெண்கள் மட்டுமே தந்தார். இளம் வீரர் என்பதற்காக சலுகை காட்டாமல், களத்தில் வெளிப்படுத்திய ஆட்டத்திற்கு மட்டுமே அஸ்வின் வழங்கிய இந்த கறாரான மதிப்பீடு சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, October 26, 2026, 9:14 [IST]
Other articles published on Oct 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+