Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்கள்.. சச்சின், கவாஸ்கர், டிராவிட் வரிசையில் இணைந்த விராட் கோலி!

பெங்களூர்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற சாதனையை நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 53 ரன்கள் எடுத்திருந்த போது, இந்த சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் இந்திய அணி டிரா செய்ய போராடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

ind vs nz virat kohli jasprit bumrah

இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 72 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், அஜாஸ் படேல் பவுலிங்கில் சிக்ஸ் அடிக்க முயன்று ஜெய்ஸ்வால் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோஹித் சர்மா - விராட் கோலி கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் கடந்து வெளியேறினார்.

தொடர்ந்து விராட் கோலி - சர்ஃபராஸ் கான் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது. ஸ்பின்னர்களை இருவரும் சிக்சரும், பவுண்டரியுமாய் வெளுத்து கட்ட, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அதிரடியாக ஆடிய சர்ஃபராஸ் கான் 42 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட அரைசதத்தை எட்டினார். மறுபக்கம் விராட் கோலி 70 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

நடப்பாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். இதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 53 ரன்களை எட்டிய போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகிய 3 வீரர்கள் மட்டுமே 9 ஆயிரம் ரன்களை குவித்துள்ளனர். தற்போது 4வது வீரராக விராட் கோலி இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். ஆனாலும் இந்த 4 பேரில் மிகவும் தாமதமாக 9 ரன்களை எட்டிய வீரர் என்ற மோசமான சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். மொத்தமாக 9 ஆயிரம் ரன்களை அடிப்பதற்கு விராட் கோலிக்கு 197 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டுள்ளது.

Story first published: Friday, October 18, 2024, 17:17 [IST]
Other articles published on Oct 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+