மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் விராட் கோலி தன்னுடைய ஐம்பதாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இதற்கு முன்பு விராட் கோலி அரை இறுதியில் மூன்று முறை விளையாடி ஒருமுறை கூட பத்து ரன்களை தாண்டவில்லை.
ஆனால் இம்முறை விராட் கோலி சாதனை படைக்க வேண்டும் என்ற வெறியுடன் விளையாடினார். கடந்த உலகக்கோப்பை அரை இறுதியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக விராட் கோலி தன்னுடைய குறிக்கோளை நோக்கி விளையாடினார்.

முதலில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி பின்னர் அதிரடியை காட்டினார். 59 பந்துகளில் 50 ரன்கள் விராட் கோலி சேர்த்தார். அப்போது நான்கு பவுண்டரிகள் மட்டும் தான் அடித்து இருந்தார். அதன் பிறகு மொத்தமாக 106 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார். இதில் எட்டு பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி முதலிடத்தை பிடித்தார்.
அது மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டிலே முதல் முறையாக 50 சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைத்தது. இதனை அடுத்து விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடித்து விட்டோம் என்பதற்காக சச்சினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பெரிய அளவில் கொண்டாடவில்லை. சதம் அடித்த பிறகு நேரடியாக சச்சினிடம் சென்று தலை குனிந்து வணங்கினார். அப்போது இந்த மரியாதையை ஏற்றுக் கொண்ட சச்சின் கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.

தன்னுடைய ஹீரோ சச்சின் ரெக்கார்டை முறியடித்த பிறகு அதனை கொண்டாடாமல் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக விராட் கோலி நடந்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தன்னுடைய மனைவி பக்கம் திரும்பிய விராட் கோலி மனைவிக்கும் முத்தம்(சைகை) கொடுத்தார்.
ஆனால் அதற்குள் மனைவி அங்கிருந்து எழுந்து நின்று பத்து முறையாவது Flying
கிஸ் கொடுத்தார். இதனை விராட் கோலி ஏற்றுக்கொண்டு சிரித்தார். தன்னுடைய இன்னிங்ஸ் முடிவடைந்த பிறகும் கூட விராட் கோலி தன்னுடைய மனைவியிடம் கையை காட்டினார். விராட் கோலி அனுஷ்கா சர்மாவும் மைதானத்தில் காட்டிய காதல் கதை தற்போது உள்ள இளம் ஜோடிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது.