Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

53 ரன்களே தேவை.. நியூசிலாந்து டெஸ்டில் சாதிப்பாரா விராட் கோலி? பெங்களூரில் ”கிங்” பேட்டிங் எப்படி?

பெங்களூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 53 ரன்கள் விளாசினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இதனால் நாளைய ஆட்டத்தில் விராட் கோலி பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமான ஒன்றாக அமைந்துள்ளது.

ind vs nz virat kohli jasprit bumrah


இதனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் நீண்ட இடைவெளிக்கு பின் பெங்களூர் மண்ணில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பாக விளையாடிய விராட் கோலி, 2வது டெஸ்ட் போட்டியில் நம்பிக்கை அளித்தார்.

அதேபோல் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் விராட் கோலி இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 217 ரன்களை விளாசி இருக்கிறார். 2022ஆம் ஆண்டு நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் விராட் கோலி சதம் மற்றும் அரைசதத்தை விளாசியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிராகவே பெங்களூர் மைதானத்தில் களமிறங்கவுள்ளார். இந்த நிலையில் விராட் கோலி பிரம்மாண்ட சாதனையை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,947 ரன்களை விளாசி இருக்கிறார்.

இந்தப் போட்டியில் 53 ரன்களை சேர்க்கும் பட்சத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு பின் எந்த வீரரும் 9 ஆயிரம் ரன்களை கடந்ததில்லை. அந்த வரலாற்றை விராட் கோலி படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நடப்பாண்டில் விராட் கோலி விளையாடியுள்ள 6 இன்னிங்ஸ்களிலும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி தனது பேட்டிங் ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஸ்பின்னர்களை அட்டாக் செய்யும் வழக்கத்திற்கு விராட் கோலி வந்துள்ள நிலையில், அவரின் பேட்டிங் மீதான ஆர்வமும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Story first published: Tuesday, October 15, 2024, 22:34 [IST]
Other articles published on Oct 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+