Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சதம் மட்டும் மிஸ் ஆகிருச்சு.. சாதனைகள் அல்ல.. ஜெயசூர்யா ரெக்கார்ட் காலி.. டாப்புக்கு சென்ற கிங் கோலி

தரம்சாலா: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி தவறவிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

IND vs NZ: Virat Kohli move past Jayasuriya and become the 4th Highest run Scorer in ODI Cricket History

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி 95 ரன்களும், ரோகித் சர்மா 46 ரன்களும், ஜடேஜா 39* ரன்களும் எடுத்து அசத்தினர். நியூசிலாந்து அணி தரப்பில் ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியை போல் இந்த போட்டியில் விராட் கோலி சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சதம் விளாசுவதற்கு 5 ரன்களும், அதே நேரத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 5 ரன்களும் தேவைப்பட்டது. இதனால் சிக்சர் அடித்து விராட் கோலி சதமடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் சிக்சர் அடிக்க முயற்சித்து 95 ரன்களில் ஆட்டமிழந்து விராட் கோலி வெளியேறினார். இதனால் ஒட்டுமொத்த தரம்சாலா மைதான ரசிகர்களும் சோகமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசியிருந்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள சச்சினின் சாதனையை சமன் செய்திருப்பார்.

சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் விளாசி முதலிடத்தில் உள்ள நிலையில், அவருக்கு பின் விராட் கோலி 48 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சச்சினின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு கிடைத்த நிலையில், விராட் கோலி அதனை தவறவிட்டுள்ளார். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜெயசூர்யாவின் சாதனையை விராட் கோலி தகர்த்துள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் உட்பட 354 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 22, 2023, 22:48 [IST]
Other articles published on Oct 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+