Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

600 இன்னிங்ஸ்.. மும்பை டெஸ்டில் விராட் கோலி படைக்கும் சாதனை.. சர்வதேச கிரிக்கெட்டில் 8வது வீரர்!

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் 600வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்க உள்ளதன் மூலமாக புதிய சாதனையை படைக்கவுள்ளார். இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் 600 இன்னிங்ஸ்களை விளையாடிய 8வது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறவுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை மறுநாள் களமிறங்கவுள்ளது. மும்பை மைதானத்தில் நடக்கவுள்ள இந்த டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுப்பதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போட்டியில் விராட் கோலி விளையாடுவதன் மூலமாக முக்கிய சாதனை ஒன்றை படைக்கவுள்ளார்.

ind vs nz rohit sharma virat kohli

ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனை படைத்தார். இதன் மூலமாக விராட் கோலி ஃபார்முக்கு வந்துவிட்டதாக பார்க்கப்பட்ட நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் 1 மற்றும் 17 ஆகிய ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த 8 இன்னிங்ஸ்களில் ஒரேயொரு அரைசதம் மட்டுமே விராட் கோலி அடித்துள்ளார். இதனால் மும்பை போட்டியிலாவது விராட் கோலி கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மும்பை டெஸ்ட் போட்டியில் விராட் கோலி களமிறங்குவதன் மூலமாக தனது 600 இன்னிங்ஸில் விளையாடவுள்ளார். இந்த சாதனையை படைக்கும் 8வது வீரர் விராட் கோலி தான்.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 199 இன்னிங்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் 283 இன்னிங்ஸ், டி20 கிரிக்கெட்டில் 117 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார். இதற்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், மஹேலா ஜெயவர்தனே, ரிக்கி பாண்டிங், சங்கக்காரா, ஜெயசூர்யா உள்ளிட்டோர் 600 இன்னிங்ஸ்களுக்கு மேல் விளையாடியுள்ளனர்.

இதனால் விராட் கோலி மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய கிரிக்கெட்டில் அசைக்க முடியாத சாதனைகளை படைத்து வரும் விராட் கோலி, சமீப காலங்களில் பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் சிரமங்களை சந்தித்து வரும் அவர், இம்முறை சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, October 30, 2024, 13:33 [IST]
Other articles published on Oct 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+