For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs NZ- 3 ஓவரில் 3 விக்கெட்டுகள்.. ரோகித் மானத்தை காப்பாற்றிய வாசிங்டன் சுந்தர்

புனே : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறிய போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மூன்று ஓவரில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்.மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நியூசிலாந்து அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

இதனால் நியூசிலாந்து அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் புனேவில் இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் களமிறங்கி இருக்கிறது.ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்த நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்த அணி முதலில் பேட்டிங்கை செய்து வந்தது. நியூசிலாந்து அணி விக்கெட் எடுக்க இந்திய அணி வீரர்கள் தடுமாறி வந்தனர்.

ind vs nz washington sundar rohit sharma sarfaraz khan

அஸ்வினின் பந்துவீச்சை தவிர மற்ற வீரர்களின் பந்துவீச்சு கொஞ்சம் கூட எடுபடாமல் இருந்தது. இதனால் நியூசிலாந்து அணி வீரர்கள் எந்த நெருக்கடியையும் இல்லாமல் ரன்களை சேர்த்து வந்தனர். இந்த சூழலில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினாலும், நியூசிலாந்தின் 197 ரன்கள் மூன்று விக்கெட் என்ற நிலையில் வலுவாக இருந்தது.

பெங்களூர் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா, புனே டெஸ்ட் போட்டியிலும் களத்தில் நின்று ரன்களை சேர்த்து வந்தார். இதனால், ரச்சின் ரவீந்திரா இந்திய அணிக்கு எமனாக இருப்பார் என ரசிகர்கள் கலக்கத்தில் இருந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய பந்துவீச்சில் மேஜிக்கை நிகழ்த்தினார்.

ரச்சின் ரவீந்திரா ஒரு மேஜிக் பந்தை வீச, வாஷிங்டன் சுந்தர் அவரை போல்டாக்கினார். இதனால் ரவீந்திரா 65 ரன்களில் வெளியேறினார். இந்த சூழலில் தேநீர் இடைவேளைக்கு முன்பு கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை நியூசிலாந்து வீரர் டாம் ப்ளாண்டல் மிஸ் செய்ய அது போல்டானது. இதேபோன்று நியூசிலாந்து அணியின் அனுபவ வீரரான டேரல் மிட்செக் விக்கெட்டையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி கண்ணிமைக்கும் நேரத்தில் வாஷிங்டன் சுந்தர் வீசிய ஸ்பெல்லில் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 204 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இதனால் நியூசிலாந்தை 250 ரன்கள் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்தில் இந்தியா விளையாடி வருகிறது. வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ரோகித் சர்மாவின் மானத்தை காப்பாற்றி இருக்கிறார்.

Story first published: Thursday, October 24, 2024, 14:58 [IST]
Other articles published on Oct 24, 2024
English summary
IND vs NZ- Washington sundar Picks 3 wickets in 3 over - 3 ஓவரில் 3 விக்கெட்டுகள்.. ரோகித் மானத்தை காப்பாற்றிய வாசிங்டன் சுந்தர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+