For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final: நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்வி.. WTC ஃபைனலுக்கு செல்ல இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

புனே: நியூசிலாந்து அணியிடம் தொடர்ச்சியாக 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வாய்ப்பு இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 2 முறை விளையாடி இருக்கிறது. 2021ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன்பின் 2023ஆம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி தோல்வியை சந்தித்தது.

ind vs nz wtc final rohit sharma

தொடர்ச்சியாக 2 முறை தோல்வியை சந்தித்தாலும், இம்முறை நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்ற வேண்டும் என்பதில் இந்திய அணி தீவிரமாக இருந்து வந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணியால் எளிதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் நிலை இருந்தது.

ஆனால் நியூசிலாந்து அணியின் அபார ஆட்டத்தால் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணியின் வெற்றி சதவிகிதம் 62.82ஆக குறைந்துள்ளது. 2வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணியை விடவும் 0.32 சதவிகிதம் மட்டுமே கூடுதலாக இந்திய அணி பெற்றுள்ளது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு 6 போட்டிகள் உள்ளது. இந்த 6 போட்டிகளில் இந்திய அணி குறைந்தபட்சம் 4 வெற்றி, ஒரு டிராவை செய்ய வேண்டும். இதில் ஒரேயொரு போட்டி மட்டுமே வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்கவுள்ளது. அதன்பின் கடைசி 5 போட்டிகளும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடக்கவுள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த 2 முறையும் ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் அபார வெற்றியை பெற்றது. ஆனால் இம்முறை கட்டாய வெற்றியை நோக்கி இந்திய அணி பயணிப்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Story first published: Saturday, October 26, 2024, 17:16 [IST]
Other articles published on Oct 26, 2024
English summary
IND vs NZ: What are the chances for India to play in the WTC Final after the worst defeat against New Zealand in Home - நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்வி.. WTC பைனலுக்கு செல்ல இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+