Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: முகமது ஷமி எங்கே? நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலும் சேர்க்கப்படவில்லை.. அமைதி காக்கும் என்சிஏ

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், முகமது ஷமி சேர்க்கப்படவில்லை என்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அக்.16ஆம் தேதி பெங்களூர் மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி அக்.24ஆம் தேதி புனே மைதானத்திலும், கடைசி டெஸ்ட் போட்டி நவ.1ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்திலும் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ind vs nz jasprit bumrah mohammed shami

இந்த நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களில் யாஷ் தயாளை தவிர்த்து அனைவருக்கும் மீண்டும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய 3 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வீரர்களாக மயங்க் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 பேரும் இடம்பெற்றுள்ளனர். இது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

நீண்ட காலமாக காயமடைந்து சிகிச்சையில் இருந்து வந்த அவர், என்சிஏவில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பாக என்சிஏ தரப்பில், நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதை இலக்காக வைத்தே முகமது ஷமி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் முகமது ஷமியை விரைவில் களத்தில் எதிர்பார்க்கலாம் என்று நம்பப்பட்டது.

ஆனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான மாற்று வீரர்கள் பட்டியலில் கூட முகமது ஷமியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன்பாக முகமது ஷமி முழு ஃபிட்னஸ் உடன் இந்திய அணிக்கு திரும்புவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே ரஞ்சி டிராபி தொடர் தொடங்கியுள்ள நிலையில், அவர் பெங்கால் அணிக்காக விளையாடி தேர்வுக் குழுவிடம் பவுலிங்கை நிரூபிக்கும் தேவையும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 12, 2024, 14:21 [IST]
Other articles published on Oct 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+