Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி, ரோகித் சர்மா இனி இந்திய அணிக்காக அடுத்தது எப்போது விளையாடுவார்கள்.. முழு விவரம்

மும்பை: இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இனி அடுத்தது எப்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய மூன்று போட்டிகளிலும் விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் களமிறங்கினர். எனினும், சொந்த மண்ணில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது, இது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.

உலகின் நம்பர் ஒன் ஒருநாள் வீரரான விராட் கோலி, நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் போட்டியிலேயே தனது அதிரடியைக் காட்டினார். ஜனவரி 11 அன்று வதோதராவின் பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில், 91 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அசத்தினார். பிறகு, ஜனவரி 14 அன்று ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில், 29 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜனவரி 18 ஆம் தேதி இந்தூரில் நடந்த இறுதி ஒருநாள் போட்டியில், கோலி 108 பந்துகளில் 124 ரன்களை விளாசி அதிரடி காட்டினார். இருப்பினும், இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 338 ரன்கள் இலக்கைத் துரத்தி வெற்றி பெற அவரது இந்த சிறப்பான ஆட்டம் போதவில்லை. இதன் விளைவாக, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி முதல்முறையாக ஒருநாள் தொடர் தோல்வியை சந்தித்தது.நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் ஒருநாள் தொடரில் விராட் கோலி மொத்தம் 240 ரன்களை சேர்த்தார்.

ஆனால், கேப்டன் ரோஹித் ஷர்மா மூன்று ஒருநாள் போட்டிகளிலும் முறையே 26, 24, மற்றும் 11 ரன்களை மட்டுமே பதிவு செய்து ஏமாற்றினார்.இந்த ஜனவரி மாத தொடருடன், அடுத்த நான்கு மாதங்களுக்கு ரோஹித் மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணிக்காக எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் களமிறங்க மாட்டார்கள். டி20 போட்டிகளில் அவர்கள் தற்போது விளையாடுவதில்லை. அடுத்து டி20 உலககோப்பை, மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் முழுவதும் ஐபிஎல் தொடர் நடைபெறுவதால் இந்திய அணி இக்காலகட்டத்தில் சர்வதேசப் போட்டிகளை விளையாடாது.

ஐபிஎல் 2026 தொடரில், விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காகவும், ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்காகவும் விளையாட உள்ளனர். எனினும் ஐசிசியின் அட்டவணைப்படி இந்தியா 2026 ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளை விளையாடத் திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொடர் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து ஜூலை மாதத்தில், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இந்த ஒருநாள் போட்டிகள் ஜூலை 14 அன்று பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனிலும், ஜூலை 16 அன்று கார்டிஃபின் சோபியா கார்டன்ஸிலும், ஜூலை 19 அன்று லண்டனின் லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, இந்திய அணி சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும், நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராகவும் தலா மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. மேலும், 2026 டிசம்பரில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளை இந்தியா தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ளும்,

Story first published: Monday, January 19, 2026, 7:20 [IST]
Other articles published on Jan 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+