IND vs NZ -46 ரன்கள் மட்டுமே எடுத்தும், இந்தியாவால் இனி வெற்றி பெற முடியுமா.. இதை செய்தால் போதும்
பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி பெறப்போவது உறுதியாகிவிட்டது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.
ஆனால் இந்திய அணியை நாம் எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது. இரண்டரை நாட்கள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட பிறகும் அதிரடியாக விளையாடி வெற்றியைப் பெற்ற அணி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்த தருணத்தில் இந்திய அணி ஒரு விஷயத்தை செய்தால் முதல் இன்னிங்சில் 46 ரன்கள் ஆட்டம் இழந்த பிறகும், வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெல்வது என்பது முற்றிலும் முடியாத காரியம் கிடையாது.தற்போது இந்திய அணி பந்துவீசி கொண்டிருக்கிறது. நியூசிலாந்த அணி அபாரமாக விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி எவ்வளவு குறைவாக ரன்கள் அடிக்கிறதோ அந்த அளவுக்கு இந்தியாவின் வெற்றி கைவசம் இருக்கிறது என்று அர்த்தம். உதாரணத்திற்கு நியூசிலாந்து அணியை 200 அல்லது 250 ரன்களில் இந்திய அணி சுருட்ட வேண்டும்.
இதன் மூலம் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கும்.
முதல் இன்னிங்சில் சொதப்பியது போல் இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி மிகப்பெரிய ரன்களை குவிக்க வேண்டும். உதாரணத்திற்கு இந்திய அணி 400 முதல் 450 ரன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் அடிக்கிறது என வைத்துக் கொள்வோம்.இதன் மூலம் இந்திய அணி மீண்டும் 200 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கும்.
கடைசி இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என நியூஸிலாந்து அணி களமிறங்கும் போது ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். பெங்களூருவில் கடைசி இன்னிங்சில் ரன்கள் எடுப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது.இதனால் இந்திய அணி வீரர்கள் அபாரமாக பந்து வீசி நியூசிலாந்து அணியை குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டும். அப்படி செய்தால் இந்தியா வெற்றி பெறலாம்.
ஆனால் அதற்கு இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாட வேண்டும். இரண்டு வீரர்கள் பெரிய சதம் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சிலே பெரிய ஸ்கோரை அடித்து விட்டால் இந்திய அணி அதனை விட 150 அல்லது 200 ரன்கள் கூடுதலாக அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications