For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுப்மன் கில் அரைசதம்.. காதலை வெளிப்படையாக காட்டிய சச்சின் மகள் சாரா.. மைதானத்தில் கியூட் செயல்

மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார். கிரிக்கெட்டில் இளம் வீரர்களின் காதல் ஜோடிகள் மீது எப்போதுமே ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் தனி கவனம் இருக்கும்.

அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கரும், சுப்மன் கில்லும் காதலிப்பதாக செய்திகள் உலா வருகின்றன. இதனை தற்போது உண்மையாகும் வகையில் இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளிலும் சச்சின் மகள் சாரா கலந்து கொள்கிறார்.

Ind vs NZ world cup semi final - Sara Tendulkar shows his appreciation towards Shubman Gill

அது மட்டுமல்லாமல் கில் விளையாடும் போதெல்லாம் சாரா டெண்டுல்கர் முகத்தில் புன்னகை பூ பூத்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் கில் மீதான தனது காதலை வெளிப்படையாகவே சாரா டெண்டுல்கர் காட்டினார். இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா முதலில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க மறுபுறம் பொறுமை காத்து வந்த கில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Ind vs NZ world cup semi final - Sara Tendulkar shows his appreciation towards Shubman Gill

இதன் மூலம் கில் 41 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த இன்னிங்ஸில் ஏழு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். ஒவ்வொரு முறையும் பௌண்டரி அடிக்கும் போது மைதானத்தில் இருந்த சாரா டெண்டுல்கர் கைதட்டி கில்லை உற்சாக படுத்தினார். ஒரு கட்டத்துக்கு மேல் எழுந்து நின்று சாரா கைதட்ட தொடங்கினார். எப்போதெல்லாம் கில் அடித்து ஆடுகிறாரோ அப்போதெல்லாம் கேமரா கில்லை காட்டி விட்டு நேராக சாரா பக்கம் தான் கேமிரா திரும்பியது.

இதனை ரசிகர்களும் கிண்டல் செய்து வந்தனர். சாரா டெண்டுல்கர் முகத்திற்கு எப்போதும் ஒரு கேமராவை செட் செய்து இருப்பார்கள் போல என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் காதலிப்பதாக செய்திகள் மட்டுமே வந்த நிலையில் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, November 15, 2023, 15:35 [IST]
Other articles published on Nov 15, 2023
English summary
Ind vs NZ world cup semi final - sara tendulkar shows his appreciation towards shubman gillசுப்மன் கில் அரைசதம்.. காதலை வெளிப்படையாக காட்டிய சச்சின் மகள் சாரா.. மைதானத்தில் கியூட் செயல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+