Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK : ஹர்திக் பாண்டியாவுக்காக துபாய் வந்த புதிய காதலி.. மீண்டும் வெளிநாட்டு பெண்ணுடன் காதல்?

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தங்களுடைய அனைத்து போட்டிகளையும் துபாயில் தான் விளையாடுகிறது. இந்த போட்டியை பாகிஸ்தான் நடத்தினாலும் ஹைபிரிட் மாடல் முறைப்படி துபாயில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக விளங்குகிறார்.

இந்திய அணியின் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராகவும் பேட்ஸ்மேன் ஆகவும் ஹர்திக் பாண்டியா இருக்கின்றார். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், அதற்கு ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா நட்டாஷா என்ற வெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில் நட்டாஷா தன்னுடைய ஜிம் பயிற்சியாளரை காதலித்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை விவாகரத்து செய்தார்.

இதனால் ஹர்திக் பாண்டியா சிங்கிளாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் காதல் மலர்ந்து இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. பிரிட்டனை சேர்ந்த பாடகியும் நடிகையுமான ஜாஸ்மின் வாலியாவுடன் ஹர்திக் பாண்டியா நல்ல நட்பில் இருப்பதாகவும் இருவரும் தற்போது அடிக்கடி டேட்டிங் செய்வதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஹர்திக் பாண்டியாவும் ஜாஸ்மின் வாலியாகவும் சமூக வலைத்தளத்தில் தனித்தனியே பதிவிட்ட போட்டோ கிரீஸ் நாட்டில் ஒரே ஹோட்டலில் எடுக்கப்பட்டது என்று அண்மையில் ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் இந்த செய்தியை வலுப்படுத்தும் விதமாக தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

Champions Trophy 2025 India vs Pakistan Virat kohli Rohit sharma

துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன் டிராபி தொடரை பார்ப்பதற்காக ஜாஸ்மின் வந்திருக்கிறார். மேலும் அக்சர் பட்டேல் மனைவி அருகே ஜாஸ்மின் அமர்ந்து ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தார். காதல் தொடர்பாக ஜாஸ்மினும் ஹர்திக் பாண்டியாவும் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் ஹர்திக் பாண்டியா மீண்டும் ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றுவதை ரசிகர்கள் குறிப்பிட்டு எச்சரித்து இருக்கிறார்கள்.

Story first published: Sunday, February 23, 2025, 19:54 [IST]
Other articles published on Feb 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+