சார்ஜா: இந்தியா , பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே எந்த வகை கிரிக்கெட் மேட்ச் என்றாலும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பும், பரபரப்பும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட மேட்ச்சுக்களில் ஒன்று ஷார்ஜாவில் நடைபெற்ற ஒரு நாள் பந்தய இறுதி ஆட்டம் பற்றி பார்ப்போம்.
22.03.1985. ரோத் மான்ஸ் 4 தேசங்கள் கோப்பை.
டாஸ் வென்ற பாக்கிஸ்தான் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.
இந்திய அணியின் துவக்கமே சரியில்லை. எதிர் கொண்ட முதல் பந்தில் ரவி சாஸ்திரி அவுட் ஆகி பெவிலியனுக்கு வந்தார்.

அடுத்து அவுட் ஆன ஸ்ரீகாந் 6 ரன்கள் மட்டும் எடுத்தார். இம்ரான்கானின் நேர்த்தியான பந்து வீச்சை இருவராலும் எதிர்கொள்ள முடியவில்லை. இந்திய அணி ஸ்கோர் 12 - 2.
இருவரின் விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் இம்ரான்கான்.
உபரி ரன்களை தவிர்த்து இரட்டைப்பட எண் ரன்கள் எடுத்தது 3
வீரர்கள் மட்டும். முஹம்மது அசாருதின் (47) கேப்டன் கபில் தேவ் (30) மதன் லால் ( 11 ) மற்றும் உபரி ரன்கள் 11. மொத்தம் 42.2 ஓவர்களில் இந்திய அணி மொத்த விக்கெட்டுக்களையும் இழந்து ( ஆல் அவுட் )
தத்தளித்தனர்.
மொத்தம் எடுத்த ரன்கள் 125. இந்த ஸ்கோர் இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தலை அதிகரித்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு (1983 ல் ) தான்
இங்கிலாந்து மண்ணில் மேற்கு இந்திய தீவுகள் அணியை தோற்கடித்து உலக கோப்பை வென்று சாதித்து இருந்தது இந்திய அணி.
மேலும் சமீபத்தில்தான் (10.03.1985) ஆஸ்திரலிய மண்ணில் பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோப்பையை வென்று அசத்தியிருந்தது இந்திய அணி. எதிரணியினர் பாகிஸ்தான். எனவே இந்த ஷார்ஜா இறுதியாட்டத்தில் இந்திய அணி வெல்லும் என்று ஆவலுடன் எதிர் பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த 125 ரன்கள் சோர்வு அடைய செய்து விட்டது என்றால் மிகையாகாது.
எது எப்படியோ இந்திய அணி பீல்டிங் செய்ய மைதானத்திற்குள் செல்லும் முன்பு கேப்டன் கபில் தேவ் நம்மளால் முடியும் என்ற நேர்மறை எண்ணத்தோடு களம் இறங்கி தன்னம்பிக்கையுடன் ஈடுப்பாட்டுடன் விளையாட
வீரார்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்தார்.
கபில் தேவ் பவுலிங்கில் தனது திறமையை வெளிக் கொன்டு வந்தார்.
பாகிஸ்தான் அணியில் சிறந்த வீரர்கள் இருந்தும் அவர்களால் அடித்து ஆட முடியவில்லை.
ஸ்கோர் 40 - 3 இருந்த வரையில் மேட்ச் பாகிஸ்தான் பக்கம் இருந்தது. 3 வது விக்கெட் ஜாவித் மியந்தாத் (0) அவுட்.
லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனின் பந்துக்களை எதிர் கொள்ள முடியாமல் அடுத்த 2 பாகிஸ்தான் விக்கெடுக்கள் சரிந்தன.அந்த வீரர்கள் அஷ்ரப் அலி, இம்ரான்கான்.
இருவரும் ஸ்கோர் செய்யவில்லை.
ஸ்கோர் 41 - 5 இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கிட்டியது.
அடுத்து வந்த வீரர்களில் இருவர் தவிர (சலீம் மாலிக் 17 ) ( மன்ஜூர் இலாஹி 9 ) மற்றவர்க ளால் சிறிதும் தாக்கு பிடிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணியில் மொத்தம் 5 வீரர்கள் ரன் எதுவும் எடுக்கவில்லை. அந்த தாக்கத்திலிருந்து மீள முடியாத பாகிஸ்தான் அணியால் மொத்தம் 87 ரன்கள் மட்டும் தான் ஸ்கோர் செய்ய முடிந்தது.
இந்திய அணி அபார வெற்றி பெற்றது 38 ரன்கள் வித்தியாசத்தில்.
கபில் தேவ், சிவராமகிருஷ்ணன் இருவரும் தலா 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
இம்ரான்கானின் அருமையான பந்து வீச்சால் வெற்றி பெற்று தர இயலவில்லை.
10 ஓவர்கள்
02 மெய்டன்கள்
14 ரன்கள்
06 விக்கெட்டுக்கள்
சுனில் கவாஸ்கர் 4 கேட்சுக்கள் பிடித்து அசத்தினார்
கடைசி வரையில் எப்படி வேண்டுமானாலும் கிரிக்கெட் மேட்ச் மாறும் என்பதற்கு இந்த ஒரு நாள் ஆட்டம் சிறந்த உதாரணம்.
வாசுதேவன், பெங்களூரு