Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: கொஞ்சம் கூட நெருக்கடி இல்ல.. துபாயில் இந்தியாவை 2 முறை தோற்கடித்தோம்- பாக். ஹரிஸ் ரவுப்

துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் உள்ள நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவை எதிர்கொள்கிறது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் இரண்டு முப்பது மணிக்கு தொடங்குகிறது.

கடைசியாக இரு அணிகளும் ஆறு முறை மோதியுள்ள ஒரு நாள் போட்டிகளில், ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணியே வெற்றி பெற்று இருக்கிறது. ஒரு போட்டி மழையால் ரத்தாகி இருக்கிறது. மேலும் பாகிஸ்தான் அணியை விட இந்திய வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில் இருப்பது வெறும் பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.

Champions Trophy 2025 Ind vs Pak Virat kohli Rohit sharma vs

இதனால் பாகிஸ்தான் வீரர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனினும் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஷ் ரவுப் பேசியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "எங்களுக்கு கொஞ்சம் கூட நெருக்கடி கிடையாது".

"வீரர்கள் அனைவரும் ரிலாக்ஸ் ஆக இருக்கின்றோம். இந்தியாவுக்கு எதிரான போட்டியை மற்ற போட்டியை போல் தான் நாங்கள் எதிர்கொண்டு விளையாடுவோம். எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பாசிட்டிவாக இருக்கிறார்கள். எங்களுடைய சிறந்த செயல்பாட்டை நாங்கள் வெளிப்படுத்துவோம். தற்போது இந்த தொடரில் உள்ள அனைத்து போட்டிகளுமே எங்களுக்கு முக்கியமான போட்டியாக மாறி இருக்கிறது".

"எனவே எங்களுடைய அதிகபட்ச செயல் திறனை நாங்கள் வெளிப்படுத்துவோம். பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்று பிரிவிலும் எங்களுடைய முழு திறனை வெளிப்படுத்துவது தான் தற்போது திட்டமாக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக உள்ள திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்வோம். துபாயில் நாங்கள் இந்திய அணியை இரண்டு முறை ஏற்கனவே வீழ்த்தி இருக்கிறோம்".

"அதே போல் நல்ல கிரிக்கெட்டை தான் நாங்கள் மீண்டும் விளையாடுவோம்.எங்கள் வீரர்கள் அனைவரும் நல்ல நம்பிக்கையில் இருக்கிறார்கள். எனவே இந்த போட்டி நல்லபடியாக அமையும். பாகிஸ்தான் அணிக்கு துபாயில் நல்ல ரெகார்ட் இருக்கின்றது. சில சமயம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் இருக்கும். எங்களுக்கு எந்த ஆடுகளம் கொடுக்கப்படுகிறதோ, அதில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்" என்று ஹரிஷ் ரவுப் கூறியிருக்கிறார். முதலில் பக்கர் சமான் காயம் காரணமாக விலகியதை அடுத்து இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இமாமுல் ஹாக் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

Story first published: Friday, February 21, 2025, 21:43 [IST]
Other articles published on Feb 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+