IND vs PAK : 14 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை.. சச்சின் ரெக்கார்ட் முறியடிப்பு
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஒவ்வொரு முடிவில் 241 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி பவர்பிளேவில் அதிரடியாக விளையாடியது. கேப்டன் ரோகித் சர்மா 15 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். முதல் பவர்பிளேவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது.

இதேபோன்று சுப்மன் கில்லும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொஞ்சம் தடுமாறினார். விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தன்னுடைய திறனை வெளிப்படுத்தினார். இந்த சூழலில் 13 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி சாகின் அப்ரிடி வீசிய பந்தில் அபாரமாக பவுண்டரி அடித்தார்.
இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை வேகமாக கடந்த சச்சினின் ரெக்கார்டை அவர் முறியடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸில் 14,000 ரன்களை கடந்த நிலையில் விராட் கோலி 257 இன்னிங்சில் அந்த ரெக்கார்டை முறியடித்து இருக்கிறார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 8,000 ரன்கள், 9000 ரன்கள், பத்தாயிரம் ரன்கள், 11 ஆயிரம் ரன்கள், 12 ஆயிரம் ரன்கள், 13000 ரன்கள், 14 ஆயிரம் ரன்கள் என அனைத்து மைல்கல்லையும் அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பீல்டிங்கிலும் விராட் கோலி ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீன் 156 கேட்ச்களை பிடித்த நிலையில் விராட் கோலி தற்போது அதனை முறியடித்திருக்கிறார். உலக அளவில் முதல் இடத்தில் 218 கேட்ச்களுடன் ஜெயவர்த்தனே இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 360 கேட்ச்களுடன் ரிக்கி பாண்டிங் உள்ள நிலையில் தற்போது விராட் கோலி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications