Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK: நெருக்கடியான கட்டத்தில் இறைவனை நாடிய பாகிஸ்தான் கேப்டன்.. ரோகித்துக்கும் அதே நிலை-ரெய்னா

மும்பை: சாம்பியன் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்டு விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வெறும் 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணி பந்து வீச தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தஸ்பி எனப்படும் இறைவனின் பெயரை கூறி பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தார்.

Champions Trophy 2025 India vs Pakistan Virat kohli Rohit sharma

அப்போது இந்த காட்சியை பார்த்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா ,வர்ணணையில் இருந்தார். அப்போது பேசிய அவர், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போது கடும் நெருக்கடி ஏற்படும். அந்தக் கட்டத்தில் சில வீரர்கள் இறைவனின் உதவியை நாடுவார்கள். முகமது ரிஸ்வான் தஸ்பீ ஓதிக்கொண்டு இருப்பது போல் ரோகித் சர்மா மகாமிருத்திஉஞ்சை மந்திரத்தை ஓதிக் கொண்டு இருப்பார் என்று கூறி கிண்டல் அடித்தார்.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற்து. அப்போது இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ரசிகர்கள், சிலர் இறைவனின் உதவியை பாகிஸ்தான் வீரர்கள் நாடினாலும் தங்களது பணியை முதலில் சரியாக செய்ய வேண்டும் என்று சாடி இருக்கிறார்கள்.பந்து வீச்சிலும், பில்டிங்கிலும் சொதப்பிவிட்டு அதன் பின் இறைவனின் உதவியை நாடி என்ன பயன் என்று குற்றம் சாட்டு இருக்கிறார்கள்.

அதே சமயம் இந்தியாவை பாராட்டியுள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பணியை சரியாக செய்ததாகவும் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கான திட்டம் அவர்களிடம் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.பாகிஸ்தானில் 1990களில் கிரிக்கெட் விளையாடுவது போல் இன்னுமே விளையாடுவதாகவும், பாகிஸ்தான் அணி தங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நேபாள், ஜிம்பாப்வே அணிகள் போல் ஆகிவிடுவார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Monday, February 24, 2025, 18:18 [IST]
Other articles published on Feb 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+