For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் ரெக்கார்டை முறியடித்த ரோஹித் - ராகுல் ஜோடி.. பாகிஸ்தானை புரட்டிப் போட்டு சாதனை!

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | ரோஹித் - ராகுல் ஜோடி.. பாகிஸ்தானை புரட்டிப் போட்டு சாதனை!

மான்செஸ்டர் : இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு அபாரமான துவக்கம் அளித்தது ரோஹித் சர்மா - லோகேஷ் ராகுல் ஜோடி.

பரபரப்பும், அழுத்தமும் நிறைந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எங்கே இந்தியா சொதப்பி விடுமோ என்ற பயம் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது.

ஆனால், ரோஹித் சர்மா - ராகுல் துவக்கத்தில் ஆடிய விதம், இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்தது. அதே சமயம் பாகிஸ்தான் அணிக்கு அழுத்தம் கொடுத்தது.

ராகுல் - ரோஹித் ஜோடி

ராகுல் - ரோஹித் ஜோடி

இந்திய அணியில் தவான் காயத்தில் இருக்கும் நிலையில், ராகுல் அவருக்கு பதில் துவக்க வீரராக களமிறங்கினார். ரோஹித் சர்மா - ராகுல் ஜோடி சரியாக ஆடுவார்களா? அவர்கள் இடையே ரோஹித் - தவான் அளவுக்கான புரிதல் இருக்குமா? என்ற சந்தேகம் இருந்தது.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

ஆனால், அபார ஆட்டம் ஆடிய இருவரும் அரைசதம், சதம் என அசத்தினர். ராகுல் நிதானமாக ஆடினார். அவர் 78 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரோஹித் மறுபுறம் அதிரடியாக ஆடி வந்தார், இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்து பல உலகக்கோப்பை சாதனைகளையும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான சாதனைகளையும் செய்துள்ளது.

சச்சின், நவ்ஜோட் சிங் சாதனை

சச்சின், நவ்ஜோட் சிங் சாதனை

ரோஹித் சர்மா - ராகுல் ஜோடி முதலில் சச்சின் - நவ்ஜோத் சிங் சித்து துவக்க ஜோடி சாதனையை முறியடித்தது. உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய துவக்க ஜோடி என்ற சாதனையை செய்தது, இதற்கு முன் சச்சின் - நவ்ஜோத் சிங் 1996 உலகக்கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்ததே அதிகமாக இருந்தது.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக..

பாகிஸ்தான் அணிக்கு எதிராக..

அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த இந்திய ஜோடி என்ற சாதனையும் புரிந்தது ரோஹித் - ராகுல் ஜோடி. கடந்த 2015இல் தவான் - கோலி இணைந்து எடுத்த 129 ரன்களை, முறியடித்து முதல் இடத்தை பிடித்தது இந்த ஜோடி.

பிரச்சனை தீர்ந்தது

பிரச்சனை தீர்ந்தது

ரோஹித் சர்மா 140 ரன்களும், ராகுல் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தவான் இல்லாத நிலையில், இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் கிடைக்குமா? என்ற கவலை இருந்தது. அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தவான் இல்லாவிட்டாலும், ராகுல் - ரோஹித் சர்மா இந்திய அணியை கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, June 16, 2019, 18:46 [IST]
Other articles published on Jun 16, 2019
English summary
IND vs PAK Cricket World cup 2019 : Rohit Sharma and Rahul break opening partnership records
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+