For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்படியா பண்ணுவாங்க.. பாகிஸ்தான் கேப்டனுக்கு விவரம் பத்தலை.. சச்சின் அதிரடி விமர்சனம்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | சர்பராஸ் அஹ்மதுக்கு சச்சின் அதிரடி விமர்சனம்!

மான்செஸ்டர் : இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் அணி செய்த தவறுகள் குறித்து சுட்டி காட்டி, பாகிஸ்தான் கேப்டனை விமர்சித்துள்ளார்.

பரபரப்பாக இருக்கும் என நினைத்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி பெரிய பரபரப்பின்றி, போட்டி தொடங்கியது முதல் இறுதி வரை இந்திய அணியின் ஆதிக்கத்துடன் நடந்து முடிந்தது.

பாக். படுதோல்வி

பாக். படுதோல்வி

இந்திய அணி நிர்ணயித்த 337 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்த பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து டிஎல்எஸ் முறைப்படி 89 ரன்களில் படுதோல்வி அடைந்தது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எல்லா வகைகளிலும் தவறு செய்தது பாகிஸ்தான் அணி.

சச்சின் கருத்து

சச்சின் கருத்து

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து பேசிய சச்சின், அந்த அணி தவறுகளை சுட்டிக் காட்டி பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அஹ்மதுக்கு விவரம் போதவில்லை என்பதை நாசூக்காக கூறினார்.

பீல்டிங்

பீல்டிங்

சர்பராஸ் அஹ்மது வஹாப் ரியாஸ் பந்து வீசும் போது ஷார்ட் மிட் விக்கெட் திசையில் பீல்டரை நிறுத்தி இருந்தார். அடுத்து சுழற் பந்துவீச்சாளர் ஷதாப் கான் பந்து வீச வந்த போது, அவருக்கு ஸ்லிப் பில் பீல்டர் நிற்க வைத்தார். பந்தை கட்டுப்படுத்த முடியாத இது போன்ற ஆடுகளங்களில், இந்த மாதிரியான பீல்டிங் தவறு. அதுவும் இது போன்ற பெரிய போட்டிகளை இப்படி அணுகக் கூடாது என சுட்டிக் காட்டினார் சச்சின்/

சொதப்பல்

சொதப்பல்

அதே போல பந்து அதிகம் ஸ்விங் ஆகவில்லை என்றால், "ஓவர் தி விக்கெட்"இல் பந்து வீச வேண்டிய தேவையில்லை. ஆனால், வஹாப் நீண்ட நேரம் கழித்தே அதில் இருந்து மாற்றிக் கொண்டு பந்து வீசினார். ஹசன் அலி மட்டுமே பந்தை ஸ்விங் செய்தார். ஆனால், அவர் தன் கோணத்தை மாற்றிக் கொண்டு பந்து வீசி இருக்க வேண்டும் என்றார் சச்சின்.

விவரம் பத்தலை

விவரம் பத்தலை

இந்தியா எந்த கட்டத்திலும் விக்கெட்டை இழந்து விடும் என தான் எண்ணவில்லை என குறிப்பிட்டார் சச்சின். அந்த அளவு பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு எந்த அச்சுறுத்தலும் இன்றி இருந்தது என்கிறார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் கற்பனை வளம் இன்றியும், மாற்று சிந்தனையும் இல்லாமல் இருந்ததாக கூறி விமர்சித்துள்ளார்.

Story first published: Monday, June 17, 2019, 16:23 [IST]
Other articles published on Jun 17, 2019
English summary
IND vs PAK Cricket World cup 2019 : Sachin Tendulkar says Sarfaraz Ahmed seemed confused
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+