Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன பிளான் பண்ணாங்க? என்ன பவுலிங் போடுறாரு இவரு.. கடும் கோபத்தில் வாசிம் அக்ரம்! #INDvsPAK

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | சுத்தி சுத்தி அடித்த இந்தியா, பாகிஸ்தான் படுதோல்வி!

மான்செஸ்டர் : முன்னாள் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சு மிக மோசமாக இருந்ததை கண்டு கடும் கோபம் கொண்டுள்ளார்.

2௦19 உலகக்கோப்பை தொடரில் பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சு சொதப்பலாக இருக்கவே இந்தியா ரன் மழை பொழிந்தது.

பந்துவீச்சு

பந்துவீச்சு

பாகிஸ்தான் அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் கொண்டு களமிறங்கியது. அவர்கள் போட்ட திட்டம் ஒன்று கூட வேலை செய்யவில்லை என்று கூறும் அளவிற்கு இருந்தது அவர்கள் ஆட்டம்.

ஆமிர் சிறப்பு

ஆமிர் சிறப்பு

முஹம்மது ஆமிர் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். அவர் 10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் மட்டுமே கொடுத்து, 1 மெய்டன் ஓவர், 3 விக்கெட்கள் என தன் திறமையை வெளிக்காட்டி இருந்தார்.

ஹசன் அலி சொதப்பல்

ஹசன் அலி சொதப்பல்

ஆனால், ஹசன் அலி படு மோசமாக பந்து வீசி வெறுப்பேற்றினார். 9 ஓவர்களில் 84 ரன்கள் கொடுத்து மிரள வைத்தார் ஹசன் அலி. ஓவருக்கு 9.33 ரன்கள் கொடுத்து இந்த உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

வாரி இறைத்தனர்

வாரி இறைத்தனர்

மற்ற பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி இறைத்து இருந்தனர். வஹாப் ரியாஸ் ஓவருக்கு 7.10 ரன்கள், ஷதாப் கான் ஓவருக்கு 6.77 ரன்கள் என கொடுத்து பின்னடைவை சந்தித்தனர்.

வாசிம் அக்ரம் கோபம்

வாசிம் அக்ரம் கோபம்

இந்த நிலையில், இந்தியா இன்னிங்க்ஸ் முடிந்த உடன் பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு சிறு பேட்டி அளித்த வாசிம் அக்ரம், பாகிஸ்தான் அணியின் திட்டங்கள் எதுவும் சரியாக இல்லை என்றும், ஹசன் அலியின் மோசமான பந்துவீச்சை பற்றியும் குறிப்பிட்டு பேசினார். ஹசன் அலி பந்து வீசும் லென்த் இன்று என்ன ஆனதோ? என அவரை தாக்கினார்.

இந்தியா என்ன செய்யும்?

இந்தியா என்ன செய்யும்?

அடுத்து இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி இருக்கும் என்று பேசிய அவர் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பிட்ச்சில் இருக்கும் தன்மையை பயன்படுத்தி சிறப்பாக பந்து வீசுவார்கள் என கூறினார்.

Story first published: Sunday, June 16, 2019, 23:13 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+