Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை- சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான்? இந்தியாவின் தயவு தேவை.. வழி என்ன?

டி20 உலக கோப்பை 2024 ஆம் ஆண்டு தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி இருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

பாகிஸ்தான் அணி தன்னுடைய முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவர் முறையில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 120 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது.

t20 world cup ind vs pak hardik pandya rohit sharma virat kohli indian national cricket team cricket 20 2024

இதன் மூலம் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி சரிவை சந்தித்து இருக்கிறது. தற்போது இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அமெரிக்க அணி நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், கனடா அணி இரண்டு புள்ளிகள் மூன்றாம் இடத்திலும், பாகிஸ்தான் அணி புள்ளிகள் ஏதுமின்றி நான்காவது இடத்திலும், அயர்லாந்து அணி புள்ளிகள் எதுவும் இன்றி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியை சூப்பர் 8 பற்றுக்கு தகுதி பெறும் நிலையில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லுமா என்பதை தற்போது பார்க்கலாம். பாகிஸ்தான் அணிக்கு தற்போது கனடா மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டம் எஞ்சி இருக்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் பாகிஸ்தான் அணி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

அதன் பிறகு அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதேபோன்று அயர்லாந்து அணி அமெரிக்காவை வீழ்த்த வேண்டும். இது நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெற முடியும்.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் கூட பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே விடம் தோல்வியை தழுவி தடுமாறியது. அப்போது அந்த அணி அடுத்த சில போட்டிகளில் வெற்றி பெற்றது. மேலும் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக பல போட்டிகள் முடிவு அமைந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை அந்த தொடரில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 10, 2024, 16:12 [IST]
Other articles published on Jun 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+