For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs PAK போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகர் சுட்டுக் கொலை.. பாதுகாவலரே கொன்றதால் பரபரப்பு

நியூயார்க் : டி20 உலக கோப்பையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் நியூயார்க் மைதானத்தில் பல பரிட்சை நடத்தின.

இதில் இந்திய அணி 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் பல்வேறு பாதுகாவலர்கள் மற்றும் ஸ்னைப்பர்கள் ஐசிசியால் பயன்படுத்தப்பட்டனர்.

t20 world cup ind vs pak hardik pandya rohit sharma virat kohli indian national cricket team cricket 20 2024

இந்த நிலையில் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஒருவர் பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஷாத் அஹமத் என்ற அந்த யூடியூபர் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான பரபரப்பை பற்றி தெரிந்து கொள்வதற்காக நியூயார்க்கில் ஒரு வீடியோ எடுத்தார்.

நியூயார்க் கடைவீதிகளில் இந்த போட்டியை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அகமத் வீடியோ எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர் ஒருவரிடம் இந்தியா,பாகிஸ்தான் போட்டியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பாதுகாவலர் பதில் தர மறுத்திருக்கிறார்.

பரவாயில்லை பதில் கூறுங்கள் என்று மைக்கை ஷாத் அஹமத் நீட்டு இருக்கிறார். இதனால் கடுப்பான அந்த பாதுகாவலர் ஷாத் அகமதை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார். இதனை அடுத்து அங்கிருந்த நண்பர்கள் அகமதை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் அவர் உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதை அடுத்து ரசிகரை சுட்டுக்கொன்ற பாதுகாவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாத் அஹமத் மைக்கை நீட்டியதால் தாம் கடுப்பாகி சுட்டுக் கொன்றதாக அந்த பாதுகாவலர் தெரிவித்திருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண வந்த மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் காலே மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Tuesday, June 11, 2024, 16:30 [IST]
Other articles published on Jun 11, 2024
English summary
Ind vs Pak T20 World cup - Pakistan fan who comes to watch match was shot dead IND vs PAK போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகர் சுட்டுக் கொலை.. பாதுகாவலரே கொன்றதால் பரபரப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+